Published:Updated:

ஜெயலலிதா ரசித்து பார்த்த சீரியல்

Vikatan Correspondent
ஜெயலலிதா ரசித்து பார்த்த சீரியல்
ஜெயலலிதா ரசித்து பார்த்த சீரியல்
ஜெயலலிதா ரசித்து பார்த்த சீரியல்

முதல்வர் ஜெயலலிதா தினமும் மாலை நேரங்களில் விரும்பிப்பார்க்கும் சீரியல் 'ஜெய் வீர ஹனுமான்'. இதை பார்க்கும்போது மிகவும் பயபக்தியுடன் செருப்பை கழட்டிவிட்டு, வெறுங்காலுடன் சேரில் அமர்ந்தபடி பார்ப்பாராம். அந்த சீரியல் பார்க்கும் அரை மணி நேரத்தில் போன் எதுவும் எடுக்கமாட்டாராம். ஏதாவது முக்கிய ஃபைல்களில் கையெழுத்து என்றாலும் கூட, அவரது உதவியாளர்கள் அருகில் போக மாட்டார்கள்.

இடையில் அவர் அப்போலோவுக்கு போனபிறகு, அவரால் அந்த சீரியல் பார்க்கமுடியவில்லை. கடைசி சில நாட்களில் அவர் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டதும், நல்ல நினைவுடன் இருந்தார். அவர் அறையில் டி.வி. ஒன்றை வைக்கச் சொன்னார். மாலை நேரங்களில் சீரியல் பார்க்கும் நேரத்தில் யாரும் அருகில் வரவேண்டாம் என்று முன்கூட்டியே ஜெயலலிதா உத்தரவிட்டாராம். சீரியல் ஆரம்பமாகும் முன், பெட்டை விட்டு எழுந்து சேரில் அமர்ந்தபடி மிகவும் பயபக்தியுடன் பார்த்தாராம். சில நேரங்களில் எழுந்து நின்று வணங்கினாராம். சீரியல் முடிந்த பிறகு, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு பெட்டில் படுப்பதை வழக்கமாக கொண்டிருந்தாராம்.