Published:Updated:

ஜெயலலிதா மற்றும் சோ-வுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி

Vikatan Correspondent
ஜெயலலிதா மற்றும் சோ-வுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி
ஜெயலலிதா மற்றும் சோ-வுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி
ஜெயலலிதா மற்றும் சோ-வுக்கு நடிகர் சங்கம் அஞ்சலி

தென்னிந்தியர் நடிகர் சங்கம் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சோ ஆகிய இருவருக்கும் அஞ்சலி செலுதத்ப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், வடிவேலு, நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்திக், பொதுச் செயலாளர் விஷால் மற்றும் பழம்பெரும் நடிகர்கள், மூத்த நடிகர்கள், இளம் நடிகர்கள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

நிகழ்வில் பேசிய ரஜினி,'1996ல் நடந்த தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைவதில் என் பங்கும் இருந்தது. இதனால், அவர் மிகவும் துன்பப்பட்டார். பிறகு என் மகள் திருமணத்துக்கு அழைத்தபோது அவர் உடனடியாக வருவதாக சொன்னபோது தான் நல்ல உள்ளம் கொண்ட ஒருவரை நான் காயப்படுத்திவிட்டேன் என்று புரிந்தது. பொது வாழ்க்கையில் ஜெயலலிதா ஒரு வைரம் போன்றவர். அவர் பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முன்னுதாரணம். அவர் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.' என்று புகழாரம் சூட்டினார்.