Published:Updated:

எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது 'வர்தா' புயல்? #LiveInfographic

Vikatan Correspondent
எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது 'வர்தா' புயல்?  #LiveInfographic
எந்த வேகத்தில் எங்கே முன்னேறுகிறது 'வர்தா' புயல்? #LiveInfographic

தெற்கு ஆந்திரா- வடதமிழகம் இடையே வர்தா புயல் நாளை கரையைக் கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்துக்கு காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நேரத்தில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இது குறித்து சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரனிடம் கேட்ட போது '' நாளை மதியம் சென்னை அருகே வர்தா புயல் கரையைக் கடக்கும் போது மிக அதிகமாக காற்று வீசும். அப்போது வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிக அதிக கனமழையும் பெய்யும். அப்போது காற்றின்  வேகம் 80-90 கி.மீ வரை இருக்கும். இன்று முதல் காற்றின் வேகமும், மழையும் படிப்படியாக அதிகரிக்கும் என்றார்.

வர்தா புயல் எந்த வேகத்தில் எந்த இடத்தில் நகர்கிறது என்பதை விளக்கும் வரைபடம்

காற்றின் வேகம் (km/h)

மழை (மி.மீ)

வர்தா புயலால் நாளை 100கி.மீ மேல் காற்று வீசக்கூடும் என்பதால் சென்னை மற்றும் புயல் தாக்கும் இடங்களில் மின் இணைப்பு நிறுத்தப்படும் என மின்வாரியத்துறை அறிவித்துள்ளது. சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதலாக 5 மாவட்ட மின் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மேலும், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகப்படியாக 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 36 மணிநேரம் மழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது

உதவி எண்கள்

வர்தா புயல் தொடர்பாக, உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570. வாட்ஸ் அப் எண்கள் 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 99445477205. மின்னஞ்சல் முகவரி gccdm1@chennaicorporation.gov.in. இவைகளை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

- ச.ஶ்ரீராம்