Published:Updated:

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

அணு ஆட்டம்!

Published:Updated:
அணு ஆட்டம்!

அணு சக்தியின் நிதி நிலை!

''அணு ஆயுதம் என்ற இனத்தோடு ஒரு போதும் மனித இனம் வாழ முடியாது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இக்ஹோ இடோஹ்,

மேயர், நாகசாகி, ஜப்பான்

##~##

லைவாணரின் பாடல் ஒன்றில் பட்​ஜெட்​டின் அடிப்படையை அழ​காக, ஆழமாகச் சொல்வார்.

''அம்பது ரூபா சம்பளக்காரன் பொஞ்சாதி

தினம் ஒன்பது தடவை காபி குடிப்பது அநீதி,

எண்பது ரூபா புடவை கேட்டா குடும்பத்​துக்​கே விரோதி!''

இந்தியாவின் வரவு, செலவுத் திட்டம் இதே நிலையில்தான் தத்தளிக்கிறது.

இன்றைய இந்தியாவில் 306 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (லோக்சபா) கோடீஸ்​வரர்களாக வலம் வருகின்றனர். அதேநேரம் கிட்டத்தட்ட 83 கோடி மக்கள் ஒரு நாளைக்கு வெறும்

அணு ஆட்டம்!

20-ல் வாழ்க்கையை நகர்த்திக்​கொண்டு இருக்கின்றனர்.

அணு ஆட்டம்!

20-க்கு இன்றைய விலைவாசியில் என்னென்ன வாங்க முடியும், எப்படி வாழ்வின் பொருளாதாரத்தை எதிர்கொள்ள முடியும் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்.

அணு ஆட்டம்!

2010-11 நிதி ஆண்டில் நமது நாட்டின் மொத்த வரவைவிட, செலவு

அணு ஆட்டம்!

3,62,000 கோடி அதிகம். இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்டது

அணு ஆட்டம்!

1,47,344 கோடி. 2011-12 நிதி ஆண்டுக்கு

அணு ஆட்டம்!

1,64,415 கோடி பாதுகாப்பு செலவுக்கு என்று ஒதுக்கப்பட்டு உள்ளது. கடந்த நிதி ஆண்டைவிட

அணு ஆட்டம்!

17,071 கோடி அதிகமாகச் செலவு செய்யப்போகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக நமது நாடு எந்த ஒரு முழு வீச்சிலான போரிலும் ஈடுபடவில்லை. 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர், ஒரு சிறிய ராணுவ நிகழ்வுதான். அப்படியானால், இவ்வளவு பணத்தை ஏன் பாதுகாப்பு என்ற பெயரில் விரயம் செய்கிறோம்?

கடந்த நிதி ஆண்டில் அணு சக்தித் துறையின் மொத்தச் செலவு

அணு ஆட்டம்!

14,426 கோடி. இதில் பாமர

அணு ஆட்டம்!

மக்களுக்காக செலவிடப்பட்டது எவ்வளவு? இந்தக் கேள்வியை சற்றே மாற்றிக் கேட்போம். இவ்வளவு பெரிய தொகையை அணு சக்தித் துறை செலவு செய்ததன் பலனாக சராசரி இந்தியக் குடிமகனுக்குக் கிடைத்த பயன் என்ன? எதுவுமே இல்லை!

இந்திய அணு மின் கழகம் (என்.பி.சி.ஐ.எல்) மார்ச் 2011-ல் முடிந்த நிதி ஆண்டில் சுமார்

அணு ஆட்டம்!

3,639 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. ஏறத்தாழ

அணு ஆட்டம்!

2,465 கோடி செலவு செய்த பிறகு, வட்டி கட்டிய பிறகு, நிகர லாபம்

அணு ஆட்டம்!

953 கோடி. இதைப் பார்த்தும் மகிழ்ச்சியடைய முடியவில்லை. காரணம் மதிப்பிறக்கம் (depreciation) என்ற பெயரில்

அணு ஆட்டம்!

426 கோடியும், நிகரச் செலவுகள் என்ற பெயரில்

அணு ஆட்டம்!

368 கோடியும் செலவிடப்பட்டு இருக்கிறது.

1948-ம் ஆண்டு முதல் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்களை, நேரத்தை, சக்தியை, மனித ஆற்றலை, பிற வளங்களைக் கொட்டிக் குவித்து இந்த கரிந்த பயிரை அறுவடை செய்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பது அவசியம். குருடர்கள் யானையின் அவயங்களைத் தடவிப் பார்த்து அனுமானங்கள் செய்ததுபோல் அல்லாமல், கண்களைத் திறந்து வீட்டுக்கு நடுவே நிற்கும் யானையை ஒரு சேரப் பார்த்தோமானால், 'வரவு எட்டணா, செலவு எண்பதணா’ என்பதாக அணு மின் நிலையத்தின் பொருளாதாரம் அப்பட்டமாகத் தெரியும்.

ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன். 2010-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அணு உலை இயக்குவோரின் சர்வதேசக் கழகம் (வானோ) எனும் அமைப்பில் இருந்து 400 பேர் இந்தியாவுக்கு வந்து, அந்த அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தை நடத்தி, வந்து இருந்த விஞ்ஞானிகளை, பொறியாளர்களைப் பாராட்டி, சீராட்டி, பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றது இந்திய அணு மின் கழகம். இதில் 21 பேர் திருவனந்தபுரம் வழியாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு வந்தனர், பிப்ரவரி 4-ம் நாள். விமான நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக, கன்னியாகுமரி, கூடங்குளம் வரை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பத்திரிகையாளர்களைக்கூட சுதந்திரமாக உலவ விடவில்லை. திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. தலைமையில் ஒரு பெரும் காவல் படை ரோந்துப் பணியில் ஈடுபட்டது. விமான நிலையம் முதல் அணு மின் நிலையம் வரை பாதுகாப்பு வெள்ளோட்டம்கூட நடத்தினார்கள்.

இவ்வளவு பெரிய பொருட்செலவில் பந்தாவாக வந்த 21 உலக அணு உலை வல்லுநர்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வெறுமனே தலையைக் காட்டிவிட்டு கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, கூடங்குளம் அணு உலை பிரமாதம் என்று அறிக்கை வேறு வெளியிட்டார்கள். அணு மின் நிலையத்தின் மேம்போக்கான இந்த நடவடிக்கையைக் கண்டு எரிச்சல் அடைந்து, 'இந்த விஞ்ஞானிகள் எவ்வளவு நேரம் உலைக்குள்ளே இருந்தார்கள், என்னென்ன பரிசோதனை செய்தார்கள், இவர்களின் பயணம், தங்கும் இடம், பாதுகாப்பு போன்றவற்றுக்கு அணு மின் கழகம் எவ்வளவு செலவு செய்தது’ போன்ற தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டேன். இன்று வரை பதில் இல்லை.

ஊழலுக்கு எதிராக, அரசின் உதாசீனத்துக்கு எதிராக, அரசு நிறுவனங்களின் பண விரயத்துக்கு எதிராக, மக்கள் விரோதப் போக்குக்கு எதிராகப் போராட விரும்பும் இளம் ஹஜாரேக்கள் இங்கே இருந்துதான் இயங்கத் துவங்க வேண்டும்! 

த கூடங்குளம் ஹேண்ட்புக்

(ஓர் ஆவணத் திரட்டு)

அணு ஆட்டம்!

கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டம் பற்றிய அடிப்படைத் தகவல்களைக்கூட, அணு சக்தித் துறையோ, மத்திய அரசோ தராமல் இருந்த நிலையில், திட்டம் சம்பந்தமான பத்திரிகைச் செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், போராட்டத் தகவல்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு புத்தகம் 2004-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. தகவல்கள் தர மறுத்த அதிகார வர்க்கத்துக்குத் தக்க பதிலாக அமைந்தது இந்தக் கையேடு. இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியனாக இருக்க நான் வாய்க்கப்பெற்றது பெரும்பேறு!

கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்தைப்பற்றிய ஒரு பொது விவாதத்தைத் துவக்குவதும், அணு சக்தித் துறை எனும் 'புனிதப் பசு’வின் போலி வேடங்களைத் தோலுரித்துக் காட்டுவதும், அணு சக்திக்கு எதிரான போராளிகளுக்குப் பயன்படும் தகவல்களைத் திரட்டி வழங்குவதுமே புத்தகத்தின் நோக்கங்கள். 382 பக்கங்கள்கொண்ட இந்த ஆவணத் திரட்டு... திரைப்படங்களும், நாவல்களும், நாடகங்களும், கவிதைகளும் சாதிக்க முனைவதை ஆவணங்கள் வழியாக அடைய முயற்சிக்கிறது.

போராட்ட களத்தில் புல்லும் ஆயுதமோ?

மாஸ்கோ நகரில் இருந்து பெட்ரோ சவோஸ்க் எனும் ஊருக்குப் போய்க்கொண்டு இருந்த ரஷ்ய விமானம் ஜூன் 21, 2011 அன்று விபத்துக்கு உள்ளாகி 44 பேர் மரணம் அடைந்தனர். இறந்தவர்களுள் முக்கியமானவர்கள், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் அணு உலைக் கலனை வடிவமைத்த கில்டோபிரஸ் எனும் நிறுவனத்தின் தலைவர், துணைத் தலைவர், உலை வடிவமைப்பாளர் மற்றும் இரண்டு பொறியாளர்கள்.

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட கூடங்குளம் பகுதி மக்கள் தங்கள் மண் விசுவாமித்திரர் கோயிலால் பாதுகாக்கப்படுவதாகவும், உலை சம்பந்தப்பட்ட ராஜீவ் காந்தி, போரிஸ் எல்ட்சின், எஸ்.கே. அகர்வால் போன்றோர் உயிர் இழந்துவிட்டதாகவும், மிக்கய்ல் கோர்பசேவ், தேவகவுடா போன்றவர்கள், பதவிகளை இழந்துவிட்டதாகவும், இந்த மாதிரியான சாபக்கேடுகள் தொடரும் என்றும் பேசிக்கொள்​கிறார்கள்!

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். வலிமையுற்ற ஓர் அமைப்பை, வலிமையற்ற ஒரு தரப்பு எதிர்த்துக் களமாடும்போது கையில் கிடைக்கும் ஆயுதங்களை எல்லாம் பிரயோகிக்க முயல்கின்றனர். ஹிட்லருக்கு எதிரான பொய்களும், கம்யூனிஸ்ட் அரசுகளுக்கு எதிரான நகைச்சுவைகளும், கலவரங்களின்போது வதந்திகளும் என நீண்ட பட்டியலையே தரலாம். அந்த வகையில் இந்த நம்பிக்கையும் கூடங்குளம் மக்களுக்கு ஓர் ஆயுதம்​தானோ?

அணு ஆட்டம்!

மருத்துவர் வி.புகழேந்தி

மதுரை மருத்துவக் கல்லூரியில் 1989-ம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் கல்வியை நிறைவு செய்த இந்த அருப்புக்கோட்டைக்காரர், கல்பாக்கத்தைக் களமாக்கிக்​கொண்டார். 1990 முதல் இன்று வரை குறைந்த செலவில் நிறைந்த மருத்துவ சேவை செய்து வரும் புகழேந்தி, கல்பாக்கம் பகுதியில் நிலவும் எலும்பு மஜ்ஜை இழப்பு நோய், ஆட்டோ இம்யூன் தைராய்டு நோய், தைராய்டு புற்று நோய் மரணங்கள் போன்ற முக்கியமான ஆய்வுகளைச் செய்து வருகிறார். 'பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள்’ எனும் அமைப்பினை நிறுவி, அணு உலைகளுக்கு எதிராகப் பேசியும், எழுதியும் வரும் இவர் 'தமிழகத்தை சூழும் அணுஉலை அபாயம்’  எனும் கையேட்டை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

- அதிரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism