Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

Published:Updated:
கழுகார் பதில்கள்

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம். 

கழுகார் பதில்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகரிகம் கலந்த அநாகரிகம் எது?

கழுகார் பதில்கள்

இந்தக் கேள்விக்கு பதில் எழுத உட்கார்ந்தபோது, ஒரு தகவல் கிடைத்தது. டெல்லி திகார் சிறையில் கனிமொழியை, சந்தித்துவிட்டுத் திரும்பிய கருணாநிதி, சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அவரிடம், 'கனிமொழியின் நிலைக்கு யார் காரணம்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். உடனே கருணாநிதி, 'கேட்பவர்கள்கூட காரணமாக இருக்கலாம்’ என்று பதில் சொல்லி இருக்கிறார்.

இதுதான் நாகரிகம் கலந்த அநாகரிகம் என்பது! 

மங்கை.ச. சென்னை-78.

கழுகார் பதில்கள்

எதிர்காலத்தில் ஜெயில்களில் ஏ.சி. வசதி வருமா?

##~##

உள்ளே போகும் கோடீஸ்வரர்களின் எண்​ணிக்கையும் கேபினெட் அந்தஸ்து உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையும் அதிகம் ஆகஆக சிறைச்சாலை வசதிகளும் அதிகமாகத்தான் செய்யும்!

சிறைகளில் வசதிகள் செய்து கொடுப்பது தவறு அல்ல. அது சித்திரவதைக் கூடமாக இல்லாமல், குற்றவாளிகளைத் திருத்தும் இடமாக அமைய வேண்டும் என்பதுதான் மனித உரிமையாளர்களது கோரிக்கை! 

வண்ணை கணேசன், சென்னை-110.

கழுகார் பதில்கள்

ஒருவனுக்கு முதன் முதலாக மனதில் சுயநலம் பிறப்பது எப்போது?

முதல் லாபம் கிடைக்கும்போது! 

பாலா சரவணன், கோவூர்.

கழுகார் பதில்கள்

பொன்முடி, பரிதி இளம்வழுதி போன்றவர்கள் ஒருவேளை வெற்றி பெற்று வந்திருந்தால், சட்டமன்ற விவாதங்கள் சற்று காரமாக இருந்திருக்குமே?

தி.மு.க. அமைச்சர்கள் அத்தனை பேர் குடுமியும் இப்போது அம்மா கையில் இருக்கிறது. ஒவ்வொருவரைப்பற்றியும் மெகா சைஸ் ஃபைல்களை தயார் செய்து வைத்துள்ளார் அவர். எனவே, பழைய காலம் மாதிரி பொன்முடியால் ஆபாச கமென்ட்களை அடிக்கவும் முடியாது. பரிதியால் பாட்டுப் பாடவும் இயலாது! 

ஆர்.சின்னச்சாமி, மணப்பாறை.

கழுகார் பதில்கள்

மன்மோகன்சிங், சோனியா, தொழில் அதிபர்கள், அமெரிக்கா - இந்த நால்வரில் இந்தியாவின் பிரதமர் யார்?

நாலாவதாகச் சொல்பவர்தான்!

1991-க்கு முன் எப்படியோ? ஆனால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் ஆன பிறகு, அனைத்துமே அமெரிக்காவின் கையில்தான். அதைப் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்திவிட்டதே விக்கிலீக்ஸ். இந்தியாவின் நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜியை நியமித்தபோது, 'மான்டேக் சிங் அலுவாலியாவைத்தானே போட வேண்டும்?’ என்று ஹிலாரி கிளின்ட்டன், டெல்லியில் இருந்த அமெரிக்க தூதுவரிடம் கேட்டது வரை, யாரை எந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக அவர்களே இருக்கிறார்கள். அதனால்தான், 'மன்மோகன்சிங் என்ன இந்தியாவின் பிரதமரா? இல்லை, அமெரிக்காவால் அனுப்பி வைக்கப்பட்ட வைஸ்ராயா?’ என்று சிலர் கேட்கிறார்கள்! 

சத்தியமூர்த்தி, குலசை.

கழுகார் பதில்கள்

இந்திய கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் என்று தா.பாண்டியன் கூறியுள்ளாரே?

கழுகார் பதில்கள்

இது நல்ல முயற்சியே! 1962-ல் சீனாவைக் காரணமாக வைத்து, இந்திய கம்யூனிஸ்ட் இரண்டாக உடைந்தது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக இரண்டு கட்சிகளும் இணைந்தே செயல்பட்டு வருகின்றன. இன்று இருவருக்கும் தத்துவார்த்த முரண்பாடுகள் இல்லை. எனவே, இணைவதே சரியானது.

தத்துவார்த்த நெகிழ்வுள்ள இந்திய கம்யூனிஸ்ட் தலைமையும், போராட்ட குணம் உள்ள மார்க்சிஸ்ட் தொண்டர்களும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் இணைவது தேவையானது. கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப் பிடிக்கப்போகிறார்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கிய 1952 தேர்தல் காலம் திரும்பக்கூட, இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்​தலாம்! 

கே.எஸ்.குமார், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

மதுரை ஹார்லிக்ஸ் மர்மம் விலகுமா?

அதில் மர்மம் என்ன இருக்கிறது? யார் காரணம் என்பதை இன்றைய முதல்வரே... எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது மதுரை வீதியில் நின்று வெளிச்சம் போட்டுக் காட்டினாரே? தான் வைத்தது உண்மையான குற்றச்சாட்டுதான் என்பதை நிரூபிக்க வேண்டியவர் ஜெயலலிதாவே! 

எஸ்.ஏ.காதர், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்

ஆட்சி மாறியும், தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை குறையவில்லையே ஏன்?

போலீஸ்காரர்கள் மாறவில்லையே! 

பொன்விழி, அன்னூர்.

கழுகார் பதில்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினி எப்படி இருக்கிறார்?

முதல் நாள் ஜெயலலிதாவுக்கும், மறுநாள் கருணாநிதிக்கும் போன் செய்து பேசும் அளவுக்குத் தெளிவாக இருக்கிறார்! 

டி.ஜெய்சிங், கோவை.

கழுகார் பதில்கள்

தொலைத் தொடர்புத் துறை தவிர மற்றவை எல்லாம் பரிசுத்தமானவையா?

சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் பதில் சொல்ல வேண்டிய கேள்வி! 

மகேசுவரன், திருத்துறைப்பூண்டி.

கழுகார் பதில்கள்

தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும் என்று சொல்கிறாரே திருமாவளவன்?

கழுகார் பதில்கள்

திருமாவளவனை ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும்கொண்ட விடுதலைச் சிறுத்தைகளின் அதிகாரபூர்வப் பத்திரிக்கையான 'தமிழ் மண்’ இதழில் கூடா நட்பு என்று ஒரு கட்டுரை வந்துள்ளது. 'கேவலம், ஜெயலலிதாவை நம்பிய அளவுக்குக்கூட, ஈழ ஆதரவாளர்களான இளைஞர்கள் கலைஞரை நம்ப மறுத்தார்கள். கலைஞர் அவர்களே! காங்கிரஸ் என்னைக் கைவிட்டுவிட்டது என்று திருவாரூர் தெற்கு வீதிக் கூட்டத்தில் நீங்கள் தழுதழுத்தமை ஒரு தந்தையின் புத்திர சோகத்தை வெளிப்படுத்தியது. ஆனால், ஒரு தமிழனின் ருத்திர கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய வேளை அல்லவா இது!’ என்கிறது அந்தக் கட்டுரை. எது 'உண்மையான’ வளவனின் குரல்?

படங்கள்: சு.குமரேசன், கே.ராஜசேகரன், எம்.உசேன்

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism