Published:Updated:

கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த இலங்கை அமைச்சர்!

Vikatan Correspondent
கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த இலங்கை அமைச்சர்!
கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த இலங்கை அமைச்சர்!
கருணாநிதியிடம் நேரில் நலம் விசாரித்த இலங்கை அமைச்சர்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் நேரில் விசாரித்தார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இலங்கையின் உவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள  காவேரி  மருத்துவமனைக்கு வந்தார். அப்போது, கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தொண்டமான், "இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதின் பேரில் கருணாநிதியை நேரில் சந்தி்த்து விசாரித்தேன். கருணாநிதி விரைவில் குணமடைய இலங்கை மக்களுடன் நாங்களும் பிரார்த்திக்கிறோம்" என்று கூறினார்.