Published:Updated:

எங்கே கழிப்பறைகள்?

எங்கே கழிப்பறைகள்?

எங்கே கழிப்பறைகள்?

எங்கே கழிப்பறைகள்?

Published:Updated:
எங்கே கழிப்பறைகள்?

சென்னை நகரம் முழுக்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் அமைக்கப்படும் என்பது அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் தவறாமல் இடம் பெறும் அம்சம். ஆனால், உண்மையில் அப்படி நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடம் சென்னையில் எங்கேயாவது இருக்கிறதா? நவீன வசதியை விடுங்கள்... தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளாவது இருக்கிறதா? எங்காவது கண்ணுக்குத் தெரியாத இடத்தில் கட்டணக் கழிப்பறை இருக்கும். அவசரத்துக்கு அதை தேடிக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு காசு வாங்குவது எவ்வளவு கேவலமான விஷயம்?

தேவையில்லாமல் எதற்கெல்லாமோ கோடி கோடியாக செலவு செய்யும்அரசு, கழிப்பறை விஷயத்தில் கவனம் செலுத்​தினால் என்ன? இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுப்பதைவிட,  கழிப்பறை இலவசம் என்று அறிவித்தால் மக்கள் மனதார வாழ்த்துவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழிப்பறைகளைக் கட்டிவைக்காமல், சென்னை நகரை சுத்தமாக்க நினைப்பது எப்படி சாத்தியமாகும் என்பதை அரசு யோசிக்கட்டும்!

- செ.மாணிக்கவாசகம், சென்னை-93

எங்கே கழிப்பறைகள்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism