Published:Updated:

’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்

’சசிகலாவை   எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்
’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்

’சசிகலாவை எதிர்ப்பவர்கள் அணி திரள்கிறார்கள்!’ - சசிகலா புஷ்பாவின் சிக்னல்

ப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா கோரியிருந்தார்.மேலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச உள்ளதாகவும்  சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.

தற்போது தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சசிகலா புஷ்பா உச்ச நீதின்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு ! 

சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள மனுவில் "ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அவரது உடல் அடக்கத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் உடலை பதப்படுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் மரணம் அடைந்தது வரை அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. எனவே அவரது மரணத்தில் சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் தமிழக மக்கள் சந்தேகிக்கின்றனர். மருத்துவமனையில் என்ன நடந்தது, என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.ஆதலால்,ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இதே கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அ.தி.மு.க-வி.ல் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.சசிகலா புஷ்பா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் அளித்துள்ளார். இது குறித்து சசிகலா புஷ்பாவிடம் பேசிய போது "இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார் "என்றார் 

"தனி மனிஷியாக உங்கள் போராட்டம் வெற்றி பெறுமா?" 

"சட்ட ரீதியாகத்தானே போராடுகிறோம் அதனால் கவலையில்லை. யார் செய்தாலும் தப்பு, தப்புதானே. சரியான முறையில் இதனைக் கொண்டு செல்வேன் என்று நம்பிக்கை உள்ளது "

 "அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆவதற்கு சசிகலாவுக்கு ஆதரவு  அதிகரித்து வருகிறதே?" 

"சசிகலாவுக்கு ஆதரவு அதிகரிக்கவில்லை. அதிகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகிறார். கட்சியில் உள்ளவர்களுக்கு  யாருக்கும் அவரைப் பிடிக்கவில்லை.ஒவ்வொரு மாவட்டச்செயலாளரையும் வரவழைத்து தன்னை முன்மொழியும் படி தன் கருத்தைத் திணித்து வருகிறார். ஜனநாயக ரீதியாக தேர்தல் வரும்போது அவர்களுக்கான ஆதரவு என்ன என்பது குறித்து தெரியும். நல்ல வேளை, நான் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது என் தலைவி கொடுத்த எம்.பி பதவி. சசிகலா கொடுத்த அழுத்தம்  காரணமாகத்தான் என்னை ராஜினாமா செய்யச் சொல்லி நிர்பந்தித்தார் முதல்வர் ஜெயலிலிதா.  நான் அப்போது பதவியை விட்டு விலகவில்லை. கடைசியாக அம்மாவுக்காக உதவி செய்ய எனக்குக் கடவுள் அருள் புரிந்துள்ளார். நானாவது அவர்களுக்காக நின்று  நீதி, நியாயம் வேண்டும் என்று குரல் கொடுக்கிறேன். அப்போதாவது அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்."

"தீபாவை எப்படிப் பார்க்கிறீர்கள்? அவருடன் கைகோக்க வாய்ப்பு உள்ளதா?" 

"தீபாவுடன் சேர்ந்து பண்ணலாம். காலப்போக்கில் அது நடக்கும். இன்னும் அவரை நான் சந்திக்கவில்லை.அனைவரும் சேர்ந்து போராடினால் நல்லதுதான். சசிகலா நடராஜனுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுடன் சேர்ந்து போராடத் தயாராக இருக்கிறேன்"

"சசிகலாவுக்கு எதிராகப் பேசுபவர்களிடம்  நீங்கள் பேசியிருக்கிறீர்களா?" 

- கே.புவனேஸ்வரி  

அடுத்த கட்டுரைக்கு