Published:Updated:

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

Published:Updated:
அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

புரட்சியின் பலிபீடம்..

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''புரட்சி என்பது ரத்த வெறி கொண்ட மோதலாகத்தான் முகிழ்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு உண்மையான புரட்சியில் எள்ளளவும் இடம் இல்லை. புரட்சி என்பது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடு அன்று. வெளிப்படையான அநீதியை மையமாகக்கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதுதான்

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

எங்கள் புரட்சியின் அடித்தளம்!'' என்று நீதிமன்றத்தில் நின்று விளக்கம் கொடுத்தவர் பகத்சிங். 

ஆயுதங்களை மட்டுமே முழுமையாக நம்பி அனுசீலன் சமிதி, யுகாந்தர் குழு, கத்தார் இயக்கம், இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசி யேஷன், சிட்டகாங் போராளிகள் இயக்கம் என்று பல்வேறு தீவிரவாத அமைப்புகள், வெள்ளையர் ஆட்சியை அகற்றும் நோக்கில் வட இந்திய மாநிலங் களில் வலம் வந்தன.

மக்களுடன் விரிவான தொடர்புகொண்டு தன்னுடைய பேச்சு, எழுத்து இரண்டின் மூலமும் பகத்சிங் வளர்த்தெடுத்த 'இந்திய இளைஞர் சங்கம்’, காந்திய வழிமுறைகளில் நம்பிக்கை இழந்தது. பகத்சிங்கும், அவரது வீரம் செறிந்த தன்னலமற்ற தோழர்களும் காந்தியத் தலைமையில் நாடு முழுவதும் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பதின் பருவத்திலேயே பங்கேற்றவர்கள். 'சௌரிசௌரா’ சம்பவத்தில் வன்முறை தலைநீட்ட, தன்னிச்சையாக ஒத்துழையாமை இயக்கத்தின் நடவடிக்கைகளை மகாத்மா நிறுத்திவைத்ததால் மனம் வெதும்பிய பகத்சிங் பரிவாரம், ஆயுதங்களைக் கைகளில் ஏந்திக் களம் கண்டது.

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

சைமன் கமிஷன் 1928-ல் டெல்லிக்கு வந்தபோது, பகத்சிங்கும் ஜெயதேவ் கபூரும் அங்கேயே சைமனை முடித்துவிட முயன்றனர். ரிவால்வர்களும், பிஸ்டல்களும் ஏந்தி வெகு தூரத்தில் இருந்தபடி தங்களது விருப்பத்தை நிறைவேற்ற முடியாது என்பதை முற்றாக உணர்ந்த பகத்சிங், வெடிகுண்டுகள் தயாரிக்கத் திட்டமிட்டார். அவருடைய கனவுக்கு உருவம் கொடுக்க ஆதரவுக் கரம் நீட்டிய இளைஞர்தான் யதீந்திரநாத் தாஸ்யதீன். முதன் முதலில் பகத்சிங்கைப்போன்றே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்துதான் தன்னுடைய சுதந்திர வேள்வியைத் தொடங்கியவர். பின்னர் சுசீந்திரநாத் சன்யால் தலைமையில் இயங்கிய தீவிரவாத அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். சன்யால் வடித்தெடுத்த 'தி ரெவல்யூஷனரி’ என்ற கொள்கைக் குறிப்பை நாடு முழுவதும் சேர்த்த யதீன், தீவிரவாத அமைப்புக்குப் பணமும் ஆயுதங்களும் திரட்டிக் கொடுத்தார். பர்மா பெட்ரோலியம் கம்பெனியின் பணத்தைக் கொல்கத்தாவில் பட்டப்பகலில் கொள்ளையடித்தார். வெடிகுண்டு தயாரிப்பதில் தேர்ச்சி மிக்க யதீந்திர நாத்தை 1928-ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போது பகத்சிங் சந்தித்தார். இருவரின் இணைப்பில்தான் வெடிகுண்டு உருவானது.

மக்களின் பிரச்னைகள் குறித்துச் சிறிதும் கவலைப் படாத செவிட்டு அரசாங்கத்தின் காதுகளில் தங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பகத்சிங்கும் பட்டுகேஸ்வர தத்தும் நாடாளுமன்றக் கட்டடத்தில் நுழைந்து, ஆட்கள் இல்லாத பகுதியில் வெடிகுண்டு வீசினர். நீதிமன்றத்தைத் தங்கள் பிரசார மேடையாக்கும் நோக்கில் வேண்டுமென்றே தப்பி ஓடாமல் காவலர்கள் கைது செய்யக் கரம் நீட்டினர். 'ஊமை மக்களும் செவிட்டு அரசாங் கமும் உள்ள இடத்தில் ஜனநாயகம் செத்துவிடும்’ என்றார் ராஜாஜி. அன்று செவிட்டு அரசாக இருந்த பிரிட்டிஷ் அரசின் காதுகளில் புரட்சியின் செய்தி சென்று சேர்வதற்கு, பகத்சிங் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தினார். இன்று, சுதந்திர இந்தியாவின் மிக மோசமான மன்மோகன் சிங் ஊழல் அரசின் உறக்கம் கலைக்க, இளைஞர்கள் காந்தியவாதி அண்ணா ஹஜாரேவின் உண்ணா நோன்பை நம்பி அற வழியில் படை நடத்துகின்றனர்.

பகத்சிங் கைது செய்யப்பட்டதும், பிரிட்டிஷ் காவல் துறை நடத்திய வேட்டையில், அவருடைய தளபதிகள் அனைவரும் சுற்றி வளைக்கப்பட்டனர். யதீந்திரநாத் இதற்கு முன்பே வங்கத்தின் பல சிறைகளில் சித்ரவதைக்கு உள்ளானவர். சிறை அதிகாரிகளின் வன்முறைக்கு எதிராக, அண்ணலின் வழியில் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அனுபவத்தைப் பெற்றவர். லாகூர் சதி வழக்கு, நாடாளுமன்ற வெடிகுண்டு வழக்கு இரண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த தும் பகத்சிங்கும் தோழர்களும் உண்ணாவிரத நடவடிக்கையில் இறங்கினர். நிராயுதபாணிகளாக சிறையின் நான்கு சுவர் களுக்கு இடையில் சிக்கியவர்களுக்கு மகாத்மாவின் உண்ணாவிரத ஆயுதம்தான் உதவிக் கரம் நீட்டியது. தீவிரவாதச் செடியில், அகிம்சை மலர்ந்து சிரித்தது. 'போர்ஸ்டல்’ சிறை முழுவதும் அகிம்சையின் மணம் நிறைந்தது.

பகத்சிங் தோழர்கள் உண்ணாவிரதம் மேற்கொள் வது என்று முடிவெடுத்ததும், யதீந்திரநாத் தாஸ் வழங்கிய அறிவுரையை இன்றும் ஒவ்வொரு சத்தியாக்கிரக வீரரும் நெஞ்சில் நிறுத்த வேண் டும். 'உண்ணாவிரதம் என்பது துப்பாக்கி தூக்குவதைவிட மிகவும் கடினமான காரியம். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு, சிறுகச் சிறுக நம் உடலைச் சிதைத்துக்கொண்டு, அங்குலம் அங்குலமாக மரணத்தை நோக்கிச் சரிவதைக் காட்டிலும், காவல் துறையின் குண்டுக்குப் பலியாவதும், தூக்கில் தொங்குவதும் மிகவும் சுலபமானது. உண்ணா விரதத்தில் ஈடுபட்ட பின்பு இடையில் பின்வாங்குவது, ஒரு புரட்சியாளனின் கௌரவத்துக்கு இழுக்கானது. ஒரு நாள் முழுவதும் நன்கு யோசியுங்கள். இறுதி வரை உண்ணாவிரதப் போரில் உறுதியாக இருக்க முடியுமா என்று சிந்தியுங்கள். உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிட்டால், நோயுற் றாலும் எந்த மருந்தையும் ஏற்கக் கூடாது. சிறை அதிகாரிகள் வலிந்து

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..

நம் வாயில் பாலைச் செலுத்தினாலும் அருந்தக் கூடாது. கடைசி வரை உண்ணாவிரதத்தில் உறுதியாக இருக்க இயலாது என்று எண்ணுபவர்கள், முதலிலேயே விலகிவிடுங்கள்’ என்றார் யதீன்.

10 நாட்கள், உண்ணாவிரதம் இருந்தவர்களைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. தோழர்களின் உடல்நிலை பலவீனமானது. சிறையில் இவர்கள் உயிர் பிரிந்தால், வெளியில் மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்று ஆட்சி அஞ்சியது. ஒவ்வொரு தோழரையும் சிறை வார்டர் கள் பலவந்தமாகத் தரையில் தள்ளி, நெஞ்சில் கால் வைத்து அழுத்திப் பிடித்தனர். ரப்பர் குழாயை மூக்கில் நுழைத்து, அதன் வழியாகப் பாலைச் செலுத்த மருத்துவர் முயன்றார். தீரம் செறிந்த தோழர்கள் இருமியும், தும்மியும் பால் வயிற்றுக்குள் போகாமல் ரப்பர் குழாயை வெளித்தள்ளப் போராடினர். யதீன் அப்படிப் போராடியபோது, மருத்துவர் செலுத்திய பால் சுவாசப் பைக்குள் புகுந்துவிட்டது. கரையில் விழுந்த மீனைப்போல அவர் துடித்தார். அவருடைய வாயில் மருந்து ஊற்ற முயன்றபோதும் தவிர்த்தார். ஊசி போடுவதையும் நிராகரித்தார். பகத்சிங், அன்பின் மிகுதியால் யதீனை மருந்து அருந்தும்படி வேண்டியபோதும் அதற்கு அவர் அசைந்துகொடுக்கவில்லை.

சாவின் சந்நிதியில் யதீன் சேர்வதற்கு முன்பு ஈரமற்ற வெள்ளை அரசு, அவரை ஜாமீனில் வெளியே அனுப்பி மக்களின் ஆத்திரத்தில் இருந்து தப்புவதற்கு சதி செய்தது. 'அரசு தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்க நான் அனுமதிக்க மாட்டேன். நான் உங்கள் நடுவில் இருந்த படியே போராடி உயிர் துறக்க ஆசைப்படுகிறேன். என் ஆசை நிறைவேற, நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்!’ என்று தோழர்களிடம் யதீன் மன்றாடினார். உண்ணாவிரதம் தொடங்கி 63 நாட்கள் ஆன நிலை யில் யதீன் மரண யாத்திரை புறப்படும் தருணம் நெருங்கியது. அவருடைய கால்களும் கைகளும் மரத்து விட்டன. கண்கள் பார்வையை இழந்துவிட்டன. ஒரு தேவதையின் மடியில் துயில்வதுபோல், யதீன் காலனின் மடியில் கண் உறங்கும் முன்பு, தன் தம்பி கிரண்தாஸ் கொண்டுவந்திருந்த பிஸ்கட் துண்டுகளைத் தோழர்களிடம் தந்து, 'நாம் உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை. இது நாம் சேர்ந்து ஏற்கும் கடைசி விருந்து. இந்த பிஸ்கட் என் அன்பின் அடையாளம்!’ என்று புன்னகைத்தபடி சொன் னார். சிரித்தபடி சாவைத் தழுவு வது, யதீன் போன்ற புரட்சியாளர்களுக்கு மட்டும் சாத்தியம். உடற்கூட்டில் இருந்து உயிர்ப் பறவை பிரியும்போது, வங்கத்தின் புரட்சிக் கவிஞர் நஸ்ருல் இஸ்லாம் இயற்றிய பாடல் ஒன்றைப் பாடும்படி தம்பியிடம் யதீன் வேண்டினார். பங்கிம் சந்திரரின் 'வந்தே மாதரம்’ கேட்க விரும்பினார். காதுகளில் புரட்சி கீதம் நுழையும்போது கண்கள் இரண்டும் கடைசியாக மூடிக்கொண்டன. காலம் ஒரு தீரனின் தியாகத்தை அழிக்க முடியாத வரிகளில் தன் கரங்களால் வரித்துக் கொண்டது. புரட்சியின் பலிபீடத்தில் 25 வயதான ஒரு மாவீரனின் மரண சாசனம் பொறிக்கப்பட்டது. அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி ஓர் உன்னத மான உயிரைக் காக்க வெள்ளை அரசுக்கு உள்ளம் இல்லை.

ஆனால் சுதந்திர இந்தியா எப்படி நடந்து கொண் டது?

தேசம் விடுதலை பெற, சபர்மதி ஆஸ்ரமத்தில் தங்கி, காந்திய வழித் தடத்தில் பாதம் பதித்துக் காலம் முழுவதும் நடந்த ஒரு கர்மயோகி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததை மத்தியில் இருந்த நேருவின் அரசும், மாநிலத்தில் நடந்த ராஜாஜியின் அரசும் மௌனமாக வேடிக்கை பார்த்த வேதனைக் காட்சி அடுத்த இதழில் வாசகர் கண் முன் விரியும்!

அண்ணல் காந்தி முதல் அண்ணா ஹஜாரே வரை..
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism