Published:Updated:

’’மா.கம்யூ. கட்சியினரை திருமணம் செய்யாதீர் ’

Vikatan Correspondent
’’மா.கம்யூ. கட்சியினரை திருமணம் செய்யாதீர் ’
’’மா.கம்யூ. கட்சியினரை திருமணம் செய்யாதீர் ’
’’மா.கம்யூ. கட்சியினரை திருமணம் செய்யாதீர் ’

கொல்கத்தா:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது  என்றும், அவர்களுடன் பேசவும் கூடாது என்றும் தமது கட்சியினருக்கு திரிணாமூல்  காங்கிரஸ் கட்சி கட்டளையிட்டுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு  கூறிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில்  ஒருவரும்,மாநில உணவு வினியோகத் துறை அமைச்சருமான ஜோதிபிரியா  முல்லிக்,”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேராதீர்கள்.அவர்களை உங்கள்  பகுதியில் உள்ள தேனீர் கடையில் பார்த்தால் கூட அவர்களுடன் பேசாதீர்கள்.

சமூகத்திலிருந்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை புறக்கணிக்க நாம்  உறுதிபூண்டுள்ளோம்.

நமது கட்சியினர் தங்களது குடும்பத்தை சேர்ந்த யாரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியை சேர்ந்த தலைவர்களையோ  அல்லது ஆதரவாளர்களையோ திருமணம்  செய்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று மேலும் கூறினார்.