Published:Updated:

டெல்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜ. அபார வெற்றி

Vikatan Correspondent
டெல்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.  அபார வெற்றி
டெல்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜ. அபார வெற்றி
டெல்லி மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.  அபார வெற்றி

புதுடெல்லி:டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில்,3 மாநகராட்சிகளையும் கைப்பற்றி பா.ஜனதா அபார வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

தேர்தல் நடைபெற்ற மொத்தமுள்ள 272 இடங்களில்,206 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.இதில் பா.ஜனதா 106 இடங்களை கைப்பற்றியுள்ளது.மேலும் பலஇடங்களில் முன்னிலை வகிக்கிறது.

அதிலும் கிழக்கு,வடக்கு மற்றும் தெற்கு ஆகிய 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியிருப்பது அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் 60,பகுஜன் சமாஜ் 14,ஆர்.எல்.டி.3,தேசியவாத காங்கிரஸ் 3,சமாஜ்வாதி 3,ஐக்கிய ஜனதா தளம்,ஐ.என்.எ.டி. ஆகியவை தலா 2 மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,மாநகராட்சி தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அக்கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என, மூன்றாகப் பிரிக்கப்பட்ட மாநகராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 15-ம் தேதி நடந்தது.மூன்று மாநகராட்சிகளிலும் மொத்தம் 272 வார்டுகளுக்கு 2 ஆயிரத்து 472 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.