பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்
 
தேவை இன்னொரு புரட்சி!
தலையங்கம்
தலையங்கம்

மி க விசித்திரமானதொரு பிரச்னையை இந்த வருட அறுவடையின்போது சந்தித்திருக்கிறார்கள், காவிரி டெல்டா விவசாயிகள்! சுமார் பத்து லட்சம் ஏக்கரில் பயிர்கள் விளைந்து தலைசாய்த்து நின்றபோதும், அதில் நாற்பது சதவிகிதம்வரைதான் அறுவடை நடந்திருக்கிறது. காரணம், விவசாய கூலித் தொழிலாளிகள் பற்றாக்குறை!

ஆறரைக் கோடி மக்கள் இருக்கும் இந்த மாநிலத்தில், அதிலும் அறுபது சதவிகிதம் பேர் விவசாயத்தையே நம்பி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்லும் நிலையில், விளைந்த பயிரை அறுத்து சந்தைக்குக் கொண்டுசெல்ல ஆளில்லை என்பது விநோதம் மட்டுமல்ல, வேதனையும்கூட!

போதுமான ஊதியத்துக்கும், தொடர்ச்சியான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதம் இல்லாத காரணத்தால், விவசாயத்தொழிலாளிகள் பலரும் நகரங்களைத் தஞ்சமடைந்து, கட்டடத் தொழில் உள்ளிட்ட வேறு பிழைப்புகளில் இறங்கிவிட்டார்கள் என்கிறது தஞ்சை கிராமங்களிலிருந்து வரும் ஓர் அதிர்ச்சித் தகவல்.

இதே நிலை தொடர்ந்தால், வருங்காலத்தில் வானம் மும்மாரிப் பெய்தாலும், விளைச்சல் தர பூமித் தாய் தயாராக இருந்தாலும், உழுவதற்கு ஆளில்லாமல் நிலங்கள் தரிசாகப் போய்விடும்!

எனவே, 'முதன்மையான, மேன்மையான, புனிதமான தொழில்' என்றெல்லாம் உழவுக்கு மகுடம் சூட்டி அழகு பார்ப்பது மட்டுமே போதாது; நடைமுறையில் அதை லாபகரமான தொழிலாக மாற்றவும் வழிவகை செய்தாக வேண்டும்! அதற்குரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்துவதிலும், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதிலும் அரசு முழுமுனைப்போடு அக்கறை செலுத்த வேண்டும்.

ஆம், இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட வேண்டியது இன்றைய அவசர, அவசியம்!

 
தலையங்கம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு