பிரீமியம் ஸ்டோரி
வந்தாச்சு ராகுல்!
வந்தாச்சு ராகுல்!
வந்தாச்சு ராகுல்!
வந்தாச்சு ராகுல்!
 
வந்தாச்சு ராகுல்!

ரு வழியாக ராகுல் காந்திக்குப் பட்டம் சூட்டிவிட்டார்கள். ‘காங்கிரஸ் கட்சியை வழிநடத்தப்போவது இவர்தான்’ என்று ஹைதராபாத்தில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் 82-வது மாநாட்டில் ரொம்ப நாசூக்காகப் புரிய வைத்துவிட்டார்கள்.

வந்தாச்சு ராகுல்!

அகில இந்திய காங்கிரஸ் மாநாடு என்றாலே ஒழுக்கம், கட்டுப்பாடு என அரசியல் நாகரிகத்துக்குப் பெயர் பெற்றதாக இருந்ததெல்லாம் ஒரு காலம். ஹைதராபாத் காங்கிரஸ் மாநாட்டிலோ, தமிழ்நாட்டு மீட்டிங் ரேஞ்சுக்கு ஏகப்பட்ட அமளிதுமளிகள். அத்தனையும், ராகுலை கட்சியின் தேசிய தலைவராக்கவேண்டும் என்பதற்காகத்தான்! ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் மேடையில் அணிவகுத்து மாநாட்டை நடத்திக் கொண்டிருக்க, உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்த இளைஞர் பட்டாளம் ஒன்று, ‘‘ராகுலை மேடை ஏற்றுங்கள். அவருக்கு இல்லாத இடம் வேறு யாருக்கு?’’ எனக் கூச்சலிட்டது. அவர்கள் எல்லோருமே, உ.பி-யின் காங்கிரஸ் பிரமுகர் ஜனார்த்தன் திவேதி தலைமையில் அணிவகுத்து வந்தவர்கள். ராகுல் தேர்ந்தெடுக்கப் பட்ட அமேதி தொகுதி வாசிகள்.

வந்தாச்சு ராகுல்!

‘‘ராகுல் உங்கள் முன் கண்டிப்பாகப் பேசுவார்’’ என்று சொல்லி, 'ஹைலைட்' டுக்கு இழுத்தவர் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டிதான். விறுவிறு என்று மேடை ஏறிய ராகுல், ‘‘எப்போது எதைச் செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் உங்களுக்காக மட்டுமே! பொறுத்திருங்கள்’’ என்று பளிச்செனச் சொல்லிவிட்டு, மேடையைவிட்டுக் கீழே இறங்கிவிட்டார்.

மூன்று நாள் மாநாட்டின் நிறைவு நாளன்று, தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையுடன் மேடையேறப்போன ராகுலை, ‘‘இதோ, இப்போது நம்மிடம் நமது ராஜீவ் காந்தி அவர்கள் பேசுவார்கள்’’ என்று சொன்ன அறிவிப்பாளர், சட்டென நாக்கைக் கடித்துக்கொண்டு, ‘‘ஸாரி! நம் தலைவரை, இதோ இந்த இளம் தலைவரின் உருவில் பார்க்கிறேன்’’ என்று சமாளிக்கும் விதமாக உணர்ச்சிவசப்பட, மேடையில் இருந்த சோனியாவின் முகத்தில் உணர்ச்சிக் கொந் தளிப்புகள்.

‘‘தலைவர் என்பவர் உருவாக்கப்படக் கூடாது. உருவாக வேண்டும். நான் உருவாக்கப்படும் தலைவ ராக இருக்க ஆசைப்பட வில்லை’’ என்று ஹைபிட்ச் சில்துவங்கியவரைப் பார்த்து சோனியா தன்னையும் அறியாமல் கைதட்டினார்.

‘‘நம் கட்சியினர் அதிகாரங்களைச் சுவைக்க நினைக்கக் கூடாது. போர்க்களங்களைச் சந்திக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும். வறுமையாலும், அறியாமையாலும் போராடிக்கொண்டு இருக்கும் மக்களைக் காப்பாற்ற நான் புறப்படப் போகிறேன். என் பின்னால் அணிவகுத்து வாருங்கள்.

நம் கட்சி பல மாநிலங்களில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. ஆனால், ‘அங்கெல்லாம் மாநிலக் கட்சிகளும், சாதி ரீதியான கட்சிகளும் பெரிய செல்வாக்கில் உள்ளன. அதனால்தான் நம் கட்சி பின்தங்கியுள்ளது’ என்று காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் பழைய வாதங்களை நான் ஏற்கத் தயாராக இல்லை. அந்த இடங்களில் எல்லாம் நம் கட்சி போர்க்குணத்தை கைவிட்டுவிட்டது. மக்களின் மனநிலையை அறியத் தவறிவிட்டது. அதுதான் உண்மை. அதைச் சரிசெய்வதே என் முதல் பணி.

இதற்காக கிராமம் கிராமமாகப் போகப்போகிறேன். பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங் களுக்கும் போகப்போகிறேன். நம் கட்சிதான் நாட்டின் பழைமையான, பாரம்பரியமான கட்சி. ஆனால், அதே சமயம், நம் கட்சிதான் இளமையான கட்சி என்று மக்களைச் சொல்லவைக்க ஆசைப்படுகிறேன்’’ என சபத மூடில் கர்ஜித்த ராகுல்... கடைசியாக,

வந்தாச்சு ராகுல்!

‘‘எங்களைப் பார்த்து இங்கு சிலர், ‘நீங்கள் என்ன மதம்?’ என்று கேட்கி றார்கள். அவர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்ள நான் கடமைப் பட்டிருக்கிறேன். எங்கள் மதம், இந்திய தேசியக் கொடிதான். என் அப்பா எங்களைவிட்டுப் பிரிந்தபோது, தேசியக் கொடிதான் எங்களைக் காப்பாற்றியது. இந்திய தேசியம்தான் எங்கள் உயிர் மூச்சாக இருந்தது’’ என்று முடித்தார்.

வெகுநேரம் பார்வையாளர்கள் கைதட்டி ஓய்ந்த பிறகும், கொஞ்ச நேரத்துக்கு விடாமல் கைதட்டிக்கொண்டு இருந்தார் சோனியா. அதேசமயம், வலுக்கட்டாயமாக பெரிய பொறுப்பு களுக்கு ராகுலை இழுப்பதை தான் விரும்பவில்லை என்பதையும் இந்த மாநாட்டில் பதிவு செய்தார் சோனியா.

வந்தாச்சு ராகுல்!

ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்து, மாநாட்டு பரபரப்பு பற்றி கேட்டோம்.

‘‘ராகுல் பேச்சு இவ்வளவு வலிமையானதாக இருக்கும் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. மாநாட்டு வேலைகளை நான் முன்னின்று நடத்தத் துவங்கியபோது, ‘மாநாடுகூட முக்கியமில்லை. அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு பிரியங்காவையும், ராகுலையும் தீவிர பிரசாரத்துக்கு அழைத்து வர, அந்த மாநாட்டில் பிள்ளையார் சுழி போட வேண்டும். அதுதான் முக்கியம்’ என்று பலரும் சொன்னார்கள்.

பிரியங்கா ஆரம்பத்திலேயே எங்களிடம், மாநாட்டுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார். அதேசமயம், ராகுலுக்குத் தீவிர அரசியல் மீது ஆர்வம் இருப்பதை அவர்தான் எங்களுக்குச் சுட்டிக்காட்டினார். அந்தத் தைரியத்தில்தான் ‘மேடையில் ராகுல் பேசுவார்’ என்று நானாக அழைத்துவிட்டேன். சோனியாஜிகூட, ‘என்னைப் பற்றியும், ராகுலைப் பற்றியும் பேசுவதற்கா இவ்வளவு பெரிய மாநாடு? கட்சி வேலைகளைப் பாருங்கள்’ என்று சின்ன கோபத்துடன் சொன்னார். ஆனால், தொண்டர்களின் எதிர்பார்ப்பைத்தான் நான் எதிரொலித்திருக்கிறேன்.

ராகுல் பேசி முடித்த பின், என்னிடம் சோனியா அம்மையார், ‘நமது இளைய எம்.பி. நன்றாகவே பேசுகிறாரே... அவரை நீங்கள்தான் தயார் செய்தீர்களா?' என்று சிரித்தபடியே கேட்டார். ‘மேடம்! அது அவரது சொந்த வார்த்தைகள்தான். அவர் ஏற்கெனவே உருவாகிவிட்ட தலைவர். இனி, புதிதாக உருவாக்கப்பட வேண்டியவர் அல்ல’ என்றேன். ஆமாம், எங்கள் தலைவர் ராஜீவின் ஒட்டுமொத்த உருவமாக இப்போது எங்கள் முன் தோன்றியிருக்கிறார் ராகுல்'' என்றார் செமத்தியாக உணர்ச்சிவசப்பட்டு!

வந்தாச்சு ராகுல்!

ராகுல் காந்தியிடம் சில நிமிடங்கள் பேச முடிந்தது. ‘‘எதிர்பார்ப்புகள் எகிறுகிறதே... உங்கள் வருங்காலத் திட்டம் என்ன?’’ என்றதும்,

‘‘இதுதான் திட்டம் என்று என் குடும்பத்தில் யாருமே எதையும் வகுத்துக்கொண்டது இல்லை. மக்களின் தேவைகளும், காங்கிரஸ் கட்சியின் தேவையும்தான் எங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்திருக்கிறது. இதோ, இந்த மாநாட்டுக்கு நான் சிறப்பு அழைப்பாளராகத்தான் அழைக்கப் பட்டேன். மூத்த தலைவர்களின் பேச்சைக் கேட்கவும், மாநாடு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும்தான் ஹைதராபாத் வந்தேன். வந்த இடத்தில், கட்சி நிர்வாகிகள் என்னை மேடை ஏற்றிவிட்டார்கள். நான் என் மனதில் இருந் ததை அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டேன்.

வந்தாச்சு ராகுல்!

என்னை நம்பியிருக்கும் கட்சிக்காரர்களை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். அதேசமயம், சிம்மாசனத்தில் இருக்கும் தலைவராக இல்லாமல், மக்களோடு மக்களாக இருக்கும் தலைவராகவே இருக்கவே ஆசைப்படுகிறேன். இனி, பேச நேரம் இல்லை. எல்லாவற்றையும் செயலில் காட்ட விரும்புகிறேன்’’ என்று பளிச்சென சொல்லிவிட்டு, சரேலென நகர்ந்தார் ராகுல்.

ஆக, நேரு குடும்பத்திலிருந்து அடுத்த அம்பு புறப்பட்டுவிட்டது.

மா நாடு நடைபெற்ற இடம், ஆந்திரத்தின் புகழ் பெற்ற கச்சிபோவ்லி ஸ்டேடியம். உலகத் தரம் வாய்ந்த இந்த விளையாட்டு நகரத்தையே மாநாட்டுப் பந்தலாக மாற்றியமைத்தது பற்றி ராகுல் தன் நண்பர்களிடம் வியந்து பேச, பந்தலை அமைத்த அம்பாஜி என்பவர் அடுத்த நாளே ராகுல் முன் நிறுத்தப்பட்டார். ‘‘ஸோ நைஸ்! ஸ்டேடியத்தின் சுவடே தெரியாமல், பாதுகாப்பான மாநாட்டுப் பந்தலை அமைத்ததற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்!’’ என்று அவரைக் கைகுலுக்கிப் பாராட்டினார் ராகுல்.

 

ரா குலுக்கும் அவரது நண்பர்களுக்கும் ஹைதராபாத் நகரை ஒட்டிய ஒரு பண்ணை வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சோனியா மகனை தனியே விடவில்லை. தான் தங்கியிருந்த கச்சி போவ்லி கெஸ்ட் ஹவுஸிலேயே தங்க வைத்துக்கொண்டார்.

 

 
வந்தாச்சு ராகுல்!
ஹைதராபாத்திலிருந்து
-எஸ். சரவணகுமார் படங்கள்: எஸ்.குமரேசன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு