Published:Updated:

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

பிரீமியம் ஸ்டோரி
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி
ஜெ. ஆட்சி..!
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி
 
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

தே ர்தல் சதுரங்கத்தில் கருணாநிதி ஒரு கிராண்ட் மாஸ்டர்!

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

கூட்டணி அமைப்பதும் ஸீட்டுகள் பிரிப்பதும், அனுபவத்தால் அவருக்குக் கை வந்த கலை. வைத்த குறி தப்பாமல் எதிர் அணிக் காய்கள் சிதறிப்போவதும் உண்டு; சில சமயம், அவரது கணக்குகள் தவறிப்போவதும் உண்டு. இந்த முறை என்ன ஆகும்?

'

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

சசிகலா தரப்புக்குச் சொந்தமானது' என்று பரபரப்பு கிளம்பியிருக்கும் 'மிடாஸ் கோல்ட்' மதுபானத் தொழிற்சாலையில், வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தினார்கள். இதையட்டி தமிழக முதல்வர், ‘‘என்னையும் எனக்கு வேண்டியவர்களையும் பழிவாங்க தி.மு.க. துடிக்கிறது’’ என்று சட்டமன்றத்தில் குற்ற மடல் வாசித்தார். அடுத்த கட்டமாக, சன் நெட்வொர்க்கைச் சேர்ந்த சுமங்கலி கேபிள் விஷனுக்கு எதிராக சட்ட அமைச்சர் ஜெயக்குமார் கொண்டுவந்த தீர்மானத் தால், இன்னும் சூடேறியிருக்கிறது அரசியல் களம்.

தி.மு.க. தலைவரின் நாடித்துடிப்பை நன்கு அறிந்த தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசினோம்... ‘‘ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் காலத்திலிருந்து இன்று ஓ. பன்னீர்செல்வம் காலம் வரைக்கும் அரசியல் எதிராளிகளின் யுத்த பாணியைக் கணித்து, அதற்கேற்ப அரசியல் பண்ணுகிறவர் எங்கள் தலைவர்.

தவறுகளில் இருந்து பாடம் படித்து, அதன் மூலமே வெற்றியைப் பறிக்கிற அரசியல் சாணக்கியம் அவருடையது. அதனாலேயே 2001-ல் நடந்த எந்தத் தவறும் இந்த முறை நடக்கக்கூடாது என்பதில் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார் கலைஞர். இந்த முறை கூட்டணியில் எந்த சேதாரமும் நடந்துவிடக் கூடாதென்பதில் கவனமாக இருக்கிறார். அதையும் தாண்டி ஏதேனும் நிகழ்ந்தாலும், அதைச் சரிக்கட்டுகிற யோசனைகளும் இப்போதே தயாராக இருக்கின்றன.

முதலில், ம.தி.மு.க-வை எடுத்துக்கொள்வோம். போனமுறை, கடைசி நேரத்தில் அவர்கள் தனித்து நின்றதால், தென் மாவட்டங் களில் தி.மு.க-வின் வோட்டுகள் பிரிந்தன. இப்போதும் வைகோ தி.மு.க-வுடனான உறவில், ஊசலாட்டத்தில் இருப்பதைக் கலைஞர் அறியாமல் இல்லை. ஒருவேளை, கூட்டணிக்கு ம.தி.மு.க. குட்பை சொன்னா லும், காங்கிரஸை வைத்து அந்த இடத்தைச் சரிசெய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது அவருக்கு. என்னதான் கோஷ்டி கானம் உச்சஸ்தாயியில் இருந்தாலும், தென்மாவட்டங்களில் காங்கிரஸுக்கென்று ஒரு நிலையான வாக்கு வங்கி இன்னமும் இருக்கிறது. தேர்தலுக் குள் அதை மேலும் பலமாக்கினால், பம்பரத்தின் இழப்பைச் சரிக்கட்டி, கைகொடுக்கும் கை என்பது எங்கள் தலைவரின் கணக்கு.

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

பாட்டாளி மக்கள் கட்சிக்கு இம்முறை தி.மு.க-வை விட்டால், வேறு போக்கிடம் இல்லை என்றாகி விட்டது! மூன்று எம்.எல்.ஏ-க்களை ஜெயலலிதா இழுத்ததைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வைத் தனது பரம எதிரிக் கட்சியாகவே டாக்டர் கருத வேண்டியுள்ளது. மேலும், தன் மகன் அன்புமணி மத்திய மந்திரியாக இருப்பதால், இந்த முறை ராமதாஸ் சுயேச்சையாக கூட்டணி பற்றி முடிவெடுத்துவிட முடியாது; ஏகத்துக்கும் ஸீட் கேட்பதோ, அது சரிப்பட்டு வராவிட்டால் வெளியேறுவதாகச் சொல்வதோ இந்த முறை நடக்காது. இது கலைஞருக்கு ரொம்பவே சாதகமான அம்சம்!’’ என்று குதூகலமாகச் சொன்ன அந்த தி.மு.க. பிரமுகர்,

‘‘தேர்தல் பிரசாரத்தைப் பொறுத்தவரை, மிகப் பெரிய ப்ராஜெக்டுகள் கலைஞரின் மேஜையில் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமான சுவர் சித்திரங்கள், போஸ்டர்கள், பத்திரிகை விளம் பரங்கள் தவிர, இந்த முறை நவீன டெக்னாலஜியையும் முழு வீச்சில் பயன்படுத்த முடிவெடுத்திருக் கிறோம்.

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

முக்கியமாக, இம்முறை ஆட்சிக்கு வந்தபிறகு ஜெயலலிதா அரசு செய்த தவறுகள் அத்தனையையும் பட்டியல் போட்டு, விஷ§வலாக எடுத்து, டி.வி-யில் அடிக்கடி போட்டுக் காண்பித்து, மக்கள் கவனத்தை ஈர்க்கப் போகிறோம். இதற்காகவே ஒரு குழு, கடந்த ஆறு மாத காலமாக மும்முரமாக இயங்கி வருகிறது. அதேபோல், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கூட்டணி அமைச்சர்களின் சாதனைகளை உள்ளடக்கிய பத்து நிமிட சி.டி. ஒன்றும் தயாராகிவிட்டது. இதற்கு சென்ஸார் போர்டின் அனுமதியும் பெறப்பட்டுவிட்டது. இதைத் தமிழகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் திரையிடப் போகிறோம்.

முழுக்க முழுக்க ஜெயலலிதா எதிர்ப்பை முன்வைத்தே இப்போதைக்குப் பிரசார வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை, வைகோ கூட்ட ணியை விட்டுச் சென்றால், அவருக்கு எதிரான அஸ்திரங்களும் தயார்தான்! பொடா சிறை வாசத்தில் இருந்தபோது அவரை கலைஞர் சென்று பார்த்தது... நாடாளுமன்றத் தேர்தலின்போது வைகோ ஊர் ஊராகச் சென்று ஜெயலலிதாவை வசைமாரி பொழிந்தது... திண்டுக்கல் தி.மு.க. மாநாட்டில் கலைஞரின் பாசத்தைச் சொல்லி, வைகோ கண்ணீர் விட்டு அழுதது என காட்சிகள் தயாராக உள்ளன!’’ என பிரசார யுக்திகளை உற்சாகமாகப் பட்டியலிட்டார்.

‘‘பா.ம.க., ம.தி.மு.க. இருக்கட்டும். மற்றபடி பார்த்தாலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அளவுக்குக் கழக கூட்டணிப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறதே... ஸீட்டு பிரிப்பு பஞ்சாயத்து சுமுகமாக நடக்குமா?’’ என்று கேட்டால்,

‘‘காங்கிரஸைப் பொறுத்தவரை, கட்சித் தலைவி சோனியா காந்தியோடு தலைவருக்கு இணக்கமான தொடர்பு இருக்கிறது. தமிழக காங்கிரஸ் தலைகளைப் பொறுத்தவரையில், அவர்கள் அனைவருமே டெல்லியிலிருந்து முக்கியப் புள்ளி வரும் வரையில் மைக் பிடித்துப் பேசும் உதிரிப் பேச்சாளர்கள்தான். அதனால், டெல்லியில் வைத்தே டீலிங்கை சுமுகமாக முடித்துவிட்டு, அதன் ஜெராக்ஸ் காப்பியை லோக்கல் தலைகளுக்குக் கொடுத்தால் போதும் என்பதுதான் நிதர்சன நிலை.

கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி

டாக்டர் ராமதாஸைப் பொறுத்தவரை அவர் ஒரு சூழ்நிலைக் கைதி. தனக்கு பலம் சேர்க்கவே திருமாவளவனை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். அவர்களோடும், கடைசி கட்டத்தில் கறாராகப் பேச்சுவார்த்தையை முடித்துவிட முடியும் என்பது கலைஞர் கணக்கு.

காம்ரேடுகளைப் பொறுத்தமட்டில், பொன் வைக்கிற இடத்தில் பூ வைத்து விட்டு, போனஸாக ஒரு புன்சிரிப்பையும் கொடுத்தால் போது மானது. இது தவிர, ஆர்.எம்.வீ-யிலிருந்து ராஜகண்ணப்பன் வரை கூட்டணியில் ஒட்டிக்கொண்டு இருக்கிற உதிரி வெடி கள்! அவர்களுக்கு சூரியன் சின்னத்தி லேயே சில தொகுதி கள் தரப்படும்'' என்று வருகிறது பதில்!

''உட்கட்சிப் பூசல்கள்?'' என்றால்...

''தேர்தலுக்குள் சரிப்படுத்த பரபரப் பாக வேலைகள் நடந்து வருகின்றன. தவிர, இந்த முறை புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கணிசமான அளவு வாய்ப்பு வழங்க முடிவெடுத் திருக்கிறார் எங்கள் தலைவர். இதற்காகவே, தமிழகம் முழுவதும் நடக்கும் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார் ஸ்டாலின்’’ என்கிறது அறிவாலயம் வட்டாரம்.

 
கருணாநிதி தயாரிப்பில் கலக்கல் காட்சி
-கபுதாஸர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு