Published:Updated:

ஜல்லிக்கட்டு போராட்டம்! கட்சிகளை கிண்டல் செய்யும் இல.கணேசன்

விகடன் விமர்சனக்குழு
ஜல்லிக்கட்டு போராட்டம்! கட்சிகளை கிண்டல் செய்யும் இல.கணேசன்
ஜல்லிக்கட்டு போராட்டம்! கட்சிகளை கிண்டல் செய்யும் இல.கணேசன்
ஜல்லிக்கட்டு போராட்டம்! கட்சிகளை கிண்டல் செய்யும் இல.கணேசன்

ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தை பாஜக எம்பி இல.கணேசன் கிண்டல் அடித்துள்ளார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்பி இல.கணேசனிடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மாடு பிடிப்பதை விட நாடு பிடிக்கவே சில கட்சிகள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்துகிறது என்று கிண்டல் அளித்தார்.

மேலும், ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது அதிக ஊழல் நடைபெற்றது என்றும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி ப.சிதம்பரம் கேள்வி எழுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இல.கணேசன் கூறினார்.