Published:Updated:

முதல்வர் ஓ.பி.எஸ்.- ராம மோகன ராவ் சந்திப்பு!

விகடன் விமர்சனக்குழு
முதல்வர் ஓ.பி.எஸ்.- ராம மோகன ராவ் சந்திப்பு!
முதல்வர் ஓ.பி.எஸ்.- ராம மோகன ராவ் சந்திப்பு!
முதல்வர் ஓ.பி.எஸ்.- ராம மோகன ராவ் சந்திப்பு!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழக முன்னாள் ஆளுநர் பி.எஸ்.ராம மோகன ராவ் இன்று சந்தி்த்துப் பேசினார்.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5-ம்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதிக்கு தினந்தோறும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் முன்னாள் தமிழக ஆளுநர் பி.எஸ்.ராம மோகன ராவ் இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் சென்ற ராம மோகன ராவ், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதா மறைவையொட்டி தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.