Published:Updated:

அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்!

அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்!
அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்!
அ.தி.மு.க.வில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் திடீர் விலகல்!

கடந்த 12 ஆண்டுகளாக அ.தி.மு.க.விலிருந்த நடிகர் ஆனந்தராஜ் அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நாளை அ.தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ள நிலையில் இந்த அறிவிப்பை ஆனந்தராஜ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் அ.தி.மு.க.விலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், 'ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவருடன் யாரையும் ஒப்பிடக் கூடாது. செங்கோட்டையன் மற்றும் பொன்னையன் ஆகியோரின் பேச்சுக்கள் வருத்தம் அளிக்கிறது. அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்துக்கு எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை' என்று கூறினார்.