Published:Updated:

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? தலைமைக்கு கடிதம் அனுப்பிய ஆனந்தராஜ்

விகடன் விமர்சனக்குழு
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? தலைமைக்கு கடிதம் அனுப்பிய ஆனந்தராஜ்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? தலைமைக்கு கடிதம் அனுப்பிய ஆனந்தராஜ்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? தலைமைக்கு கடிதம் அனுப்பிய ஆனந்தராஜ்

அதிமுகவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து கட்சியின் தலைமைக்கு நடிகர் ஆனந்தராஜ் விளக்க கடிதம் அனுப்பியுள்ளார்.

12 ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த நடிகர் ஆனந்தராஜ் இன்று திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், தான் விலக்கியதற்கான காரணத்தை அதிமுக தலைமைக் கழகத்துக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், "நடிகர் ஆனந்தராஜ் ஆகிய நான் புரட்சித்தலைவி அம்மாவால் இந்த கழகத்தில் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டேன். என்னை கழகத்தின் உறுப்பினராக இணைத்துக் கொண்ட நாளில் இருந்து இன்று வரை கழக கட்டுப்பாட்டையும், கழக கண்ணியத்தையும் ஒரு துளியும் மீறாமல் உண்மையான தொண்டனாக இந்த கழகத்துக்கு உழைத்தேன்.

அம்மாவை என் தலைவியாக ஏற்றுக் கொண்ட நான், அம்மாவின் இழப்பு என் மனதில் பெரிய காயத்தை ஏற்படுத்தி விட்டது. அந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என்ற வலியின் காரணமாக கழகத்தில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறேன். என்னை கழகத்தில் இணைத்துக் கொண்ட என் தலைவி அம்மாவுக்கும் இத்தனை காலம் என்னோடு ஒத்துழைத்த கழக நிர்வாகிகளுக்கும், ராசியான நடிகர் என்று வாய் நிறைய அழைத்த அம்மாவின் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி" என்று கூறியுள்ளார்.