Published:Updated:

பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் விருப்பம்?- பொன்னையன் பதில்

விகடன் விமர்சனக்குழு
பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் விருப்பம்?- பொன்னையன் பதில்
பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் விருப்பம்?- பொன்னையன் பதில்
பொதுச்செயலாளர் பதவிக்கு யாரெல்லாம் விருப்பம்?- பொன்னையன் பதில்

அதிமுக தலைமையேற்பது பற்றி சசிகலா இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று கட்சியின் அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறினார். 

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன், ஆண்டுதோறும் பொதுக்குழு கூட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் பொதுக்குழு நடக்கிறது என்றும், பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை யாரும் மனு அளிக்கவில்லை என்றும் கூறினார்.

நாளை நடைபெற பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்வும் ஒரு அம்சமாக இருக்கலாம் என்று தெரிவித்த பொன்னையன், சசிகலா தலைமையேற்க கட்சியின் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், தலைமையேற்பது பற்றி சசிகலா இன்னும் ஒப்புதல் தரவில்லை என்றும் கூறினார்.

பொதுக்குழுவில் சசிகலா பங்கேற்பதில் பிரச்னை இல்லை என்றும்,தலைமையேற்க நிர்வாகிகள் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும் சசிகலா ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் பொன்னையன் தெரிவித்தார்.

கட்சியின் அனைத்து அமைப்புகளும் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறிய பொன்னையன், சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கில் எந்த பிரச்னையும் இல்லை. பொதுக்குழுவிற்கு சர்வ அதிகாரமும் இருக்கிறது என்றார்.

அன்பு, பற்று காரணமாக அதிமுக நிரந்தர பொதுச் செயலாளர் என ஜெயலலிதா அழைக்கப்பட்டார் என்றும் பொன்னையன் கூறினார்.