Published:Updated:

2ஜி:சுப்ரமணியன் சுவாமி மீது ப.சிதம்பரம் மகன் அவதூறு வழக்கு!

2ஜி:சுப்ரமணியன் சுவாமி மீது ப.சிதம்பரம் மகன் அவதூறு வழக்கு!
2ஜி:சுப்ரமணியன் சுவாமி மீது ப.சிதம்பரம் மகன் அவதூறு வழக்கு!
2ஜி:சுப்ரமணியன் சுவாமி மீது ப.சிதம்பரம் மகன் அவதூறு வழக்கு!

புதுடெல்லி: 2ஜி ஊழலில் தாம் ஆதாயமடைந்ததாக குற்றம்சாட்டிய ஜனதா கட்சித்  தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீது,மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்  சிதம்பரம் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தம் மீது,தனது தந்தை மீதும் சுவாமி கூறிய குற்றச்சாட்டுக்களை கார்த்திக் சிதம்பரம்  முற்றிலும் மறுத்துள்ளார்.

முன்னதாக நேற்று, 2ஜி ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக்  சிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயமடைந்ததாக குற்றம்சாட்டியிருந்த சுவாமி,”
”கார்த்திக் சிதம்பரத்தின் “அட்வாண்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங்” -Strategic  Consulting- என்ற நிறுவனம், ’ஏர்செல் வென்சர்ஸ்’  நிறுவனத்தின் ஐந்து சதவீத  பங்குகளை வைத்திருந்தது.

தனது மகன் கார்த்திக்கின் நிறுவனத்திற்கு ’ஏர்செல் வென்சர்ஸ்’ நிறுவனத்தின் பங்குகள்  அளிக்கப்பட்டால்தான் ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்தத்திற்கு, அன்னிய முதலீட்டு  ஊக்குவிப்பு வாரியத்தின் - Foreign Investment Promotion Board (FIPB) -  ஒப்புதல் அளிக்கப்படும் என்பதை சிதம்பரம் உறுதி செய்துகொண்டார்.

2ஜி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை வரம்பு குறுகிய  வட்டத்திற்குள் மட்டும் இருக்காமல்,கார்த்திக் சிதம்பரம் வரை நீட்டிக்கப்பட வேண்டும்”  என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.