Published:Updated:

காவிரி விவகாரம்! கர்நாடகாவை நிர்பந்திக்குமா நஷ்டஈடு வழக்கு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காவிரி விவகாரம்! கர்நாடகாவை நிர்பந்திக்குமா நஷ்டஈடு வழக்கு?
காவிரி விவகாரம்! கர்நாடகாவை நிர்பந்திக்குமா நஷ்டஈடு வழக்கு?

காவிரி விவகாரம்! கர்நாடகாவை நிர்பந்திக்குமா நஷ்டஈடு வழக்கு?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


மிழகத்தை வறட்சிக்கு உள்ளாக்கியது வடகிழக்கு பருவமழை என்று சொன்னால், டெல்டா மாவட்டங்களை வறட்சிக்கு உள்ளாக்கியது வடகிழக்குப் பருவமழையுடன் சேர்த்து கர்நாடகா அரசும் ஒரு காரணம். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்குப் பின்னரும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா அரசு மறுத்து வருகிறது.

வறட்சியின் பிடியில் தவிப்பு

கடந்த சில ஆண்டுகளாக பாசனதுக்காக மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து போதுமான தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கின்றன.

நஷ்ட ஈடு வழக்கு

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அதில் நஷ்டஈடு வழக்கும் ஒன்று. நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகா அரசு அமல்படுத்தாததால், காவிரி டெல்டாவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான கர்நாடகா அரசு ரூ.2,400 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 2013-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு பலகட்டங்களைக் கடந்துள்ளது. அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, ஒரு வாரத்துக்குள் சாட்சியங்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய இரு மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பந்தப்படுத்தும்

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சண்முகத்திடம் கேட்டோம். "காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடகா அரசு செயல்பட்டு வருகின்றது. கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் 2013-ம் ஆண்டிலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன்மீது இன்னும் முடிவு ஏற்படாமல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. சட்டரீதியாக தமிழக அரசு இதனை அணுகி இருக்கிறது. நடுவர் மன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது. எனினும் நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மறுத்த கர்நாடகா அரசுக்கு ஒரு நிர்பந்தத்தை உருவாக்கும் வகையில் தமிழக அரசு நஷ்ட ஈடு கேட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறந்து விடத்தான் வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறோம்" என்றார்.

கொந்தளிக்கும் விவசாயிகள்

வறட்சி காரணமாக கடந்த சிலமாதங்களாக காவிரி டெல்டா விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர்  வேதனையில் உயிழந்தனர் அண்மையில் வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில்தான் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். ஆனால், அது போதுமானதல்ல என்று விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் வறட்சியால் வேதனை அடைந்து உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கும் போதுமான நிவாரணத்தை அரசு அறிவிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக அரசிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்திருக்கும் தமிழக அரசு, டெல்டா விவசாயிகளுக்கு உண்மையான பாதிப்புக்கு ஏற்றபடி நிவாரண உதவி வழங்கவில்லை என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

- கே.பாலசுப்பிரமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு