Published:Updated:

''எனக்கும் திருமாவுக்கும்தான் தமிழ் மீது அக்கறை!''

அன்பழகனை சீண்டிய ராமதாஸ்

##~##

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் '2011-ம் ஆண்டு விருதுகள்’ வழங்கும் விழா, சட்டப் பேரவைத் தேர்​த​லால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்தது. 

'அம்பேத்கர் சுடர்’ விருது பெற்ற பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் பேச்சில், ஆரம்பம் முதல் கடைசி வரை காட்டமோ காட்டம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அண்ணல் அம்பேத்கரின் தாரக மந்திரம், 'கற்பி, ஒன்று சேர், போராடு அல்லது புரட்சி செய்!’ ஆனால், இந்த மூன்றையும் நாம் மறந்துவிட்டோமோ? இதைச் செயல்படுத்த முடியவில்லையா... அல்லது அதற்கு இசைவான நேரம் கனியவில்லையா? தமிழக வரலாறு, நீதிக் கட்சி... அதன் பிறகு பல்வேறு அரசியல் கட்சிகள்... ஆனாலும், சமூக அளவில், பொருளாதார அளவில், அரசியல் அளவில் தலித்கள் இன்னும் கடைக்கோடியில் இருக்கிறார்கள். நாம் எதைக் கற்பித்தோம்? டாஸ்மாக் கடைக்​குப்

''எனக்கும் திருமாவுக்கும்தான் தமிழ் மீது அக்கறை!''

போவதற்கும், கோடம்பாக்கத்தில் நாளும் வெளியிடப்பட்டும் திரைப்படங்களைப் பார்த்து அவர்களின் விசிறிகளாக மாறுவதற்கும், இலவசங்களைப் பணிந்து வணங்கி வாங்கிக் கொண்டுபோய் ஆக்கி... இல்லை, ஆக்கிச் சாப்பிட ஒன்றும் இல்லை, பொங்கிச் சாப்பிடுவதற்கு மக்களைப் பழக்கிவிட்ட நிலை... நாம் கற்பிக்க மறந்துவிட்டோமா? போராட மறந்துவிட்டோமா? 'புரட்சி, புரட்சி’ என்ற வார்த்தை என்னைப் பொறுத்த வரை தமிழகத்தில் ஒரு கெட்ட வார்த்தை. இங்கே என்ன புரட்சி நடந்துவிட்டது? பல்பொடி இலவசமாகத் தந்து, இப்போது மின்விசிறி, ஆடு மாடு வரை இலவசமாகத் தரும் சூழ்நிலைதான் புரட்சியாக வெடித்து இருக்கிறது. தலித் மக்களின் குடிசைகளுக்குப் பொருளாதார மாற்றம் வரவே இல்லையே? தொழில்கள் பற்றிய சிந்தனை தலித் இளைஞனுக்கு வரவிடாமல், டாஸ்மாக் கடைகளாலும் சினிமாவாலும் காயடிக்கப்பட்டுக் கிடக்கிறார்களே? 50 ஆண்டுகளாக சினிமா, அரசியல் நுழைந்து தமிழனை சீரழித்துக்கொண்டு இருக்கிறதே? இதை மாற்ற தலித் இளைஞன் என்ன செய்யப்போகிறான்?'' என்று கேட்ட ராமதாஸ்,

''உ.பி-யில் நடந்த புரட்சி இங்கும் நடக்க வேண்​டும்! கன்ஷிராம், மாயாவதி எல்லாம் எப்படி சாதித்​தார்கள்? ஒட்டுமொத்த தலித்களும் அவர் பின்னால் நின்றார்களே... அதை இங்கே எப்போது நடத்திக்காட்டுவீர்கள்? 5 ஸீட்டுக்கும் 10 ஸீட்டுக்கும் நாம் ஏன் ஆலாய்ப் பறக்க வேண்டும்? 'தமிழ் தமிழ்’ என்று நீங்களும் நானும்தான் முழங்குகிறோம். ஈழத் தமிழர் பற்றி, நாம் இருவரும்தான் என்றும் கவலைப்படுவோம். தமிழுக்காக நாம்தான் களம் கண்டோம். அணி கண்டோம். ஆனால், தமிழ் இன்று எங்கே இருக்கிறது? எங்கும் தமிழ் இல்லை!'' என்று ராமதாஸ் பேசப் பேச... ஆரவாரக் கைதட்டல்கள்.

இவை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்​கொண்டு இருந்தார் 'பெரியார் ஒளி’ விருது பெற்ற தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன். அடுத்து மைக் பிடித்த அவர், ''பெரியாரின் ஒளியால் கண் திறந்தவன்... பெரியாரின் ஒளியால் பிழைப்பு நடத்துகிறவன்... அதைப் பரப்பும் பணியில் உள்ளவன் நான். நாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோமே, தமிழ் மொழிக்காரர்களாக, ஒரே தமிழ் இனமாக.. இந்த உணர்வை பெரியார்தான் உண்டாக்கினார்.

''எனக்கும் திருமாவுக்கும்தான் தமிழ் மீது அக்கறை!''

திருமாவளவனை என் மாணவர் எனச் சொல்லிக்​​கொள்ளும் உரிமை எனக்கு உண்டு. அந்த அடிப்படையில் சொல்கிறேன், சட்டப்படியான உரிமைகளை நமக்குப் பெற்றுத் தந்தவர் அம்பேத்கர் என்றால்... தமிழகத்தில் பெரியார் இல்லை என்றால் தமிழன், மனிதனாகி இருக்க முடியாது. அம்பேத்கர் முதல் முறையாகத் தமிழகத்துக்கு வந்தபோது, அவரை எதிர்த்துப் பல இடங்களில், கடும் எதிர்ப்புகள் இருந்தன. அதைக் கேள்விப்பட்ட பெரியார் துடித்துப்போய், அம்பேத்கருக்கு ஆதரவாக  நின்றார். எதை மறந்தாலும் தந்தை பெரியாரை மறந்துவிடக் கூடாது.

உதாரணத்துக்காகச் சொல்கிறேன், எங்கள் ஊர்ப் பகுதிகளில், முதலியார் சமூகத்தைச் சேர்ந்த எனது வீட்டுக்குள், வன்னியர் சமூகத்தில் பிறந்த பா.ம.க. தலைவர் மணியை உட்கார விட மாட்டார்கள். நமக்குள்ளே இருக்கும் இந்த வேறுபாட்டு உணர்வு மாறினால்தான், தமிழன் என்ற உணர்வு வலுவாகும். ஈழத் தமிழனும் நம்மவன் எனும் உணர்வு வரும். ஆனால், அவன் நம்மைவிட்டு வேறு எங்கேயோ போகிறான், அது வேறு...'' என்று சிலேடையாகப் பேசி அமர்ந்தார்.

கடைசியாக மைக் பிடித்த திருமா, ''எதிர்க் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் எத்தனை பேருக்கு சமூக நீதி அரசியலைப்பற்றி தெரியும்? அசினைப் பற்றியும் நமீதாவைப் பற்றியும் தன் தலைவனோடு சேர்ந்து டூயட் பாடிய நடிகைகளைப் பற்றியும்தான் அவர்களுக்குத் தெரியும்!'' என போகிறபோக்கில் விஜயகாந்த் கட்சியினரை ஒரு பிடி பிடித்தார்.

தேர்தல் தோல்வி காரணமாக சோர்ந்து இருந்த கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தப் படாத பாடுபடுகிறார் திருமா!

- இரா.தமிழ்க்கனல்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்