Published:Updated:

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம் : தேச, சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம் : தேச, சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
News
தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம் : தேச, சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

தமிழக ஜல்லிக்கட்டு போராட்டம் : தேச, சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

ல்லிக்கட்டுப் போராட்டம் இந்தியாவைக் கடந்து சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கிய சில நாட்களில் அது பற்றிய செய்திகளைக் கண்டுகொள்ளாத தேச ஊடகங்கள், இப்போது முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிடுகின்றன. அதே நேரத்தில் சில இந்திய ஊடகங்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகள் வெளியிட்டுள்ளன. இது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னொரு புறம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஜல்லிக்கட்டு போராட்டக் களம் ஈர்த்துள்ளது.

என்.ஆர்.ஐ நிதி வருகிறதாம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காகத் தங்களுக்குள் பணம் செலவழித்துக் கொள்கின்றனர். ஆனால், என்.டி.டி.வி செய்தி சேனல் வெளியிட்ட செய்தியில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் உதவி செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழ் மக்கள் மூவ்மெண்ட்

டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தில் இருந்து ஒளிபரப்பாகும் டைம்ஸ் நவ் தொலைகாட்சியில் தமிழ் மக்கள் மூவ்மெண்ட் (#TAMIL MAKKAL MOVEMENT ) என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருக்கின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பான செய்திகளை இந்த ஹேஷ் டேக் உடன் ஒளிபரப்புகின்றனர். சென்னை மெரினா, மதுரை, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் இருந்து செய்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகின்றனர். ஒரு மணி நேர விவாத நிகழ்ச்சியிலும் ஜல்லிக்கட்டு பற்றி விவாதிக்கின்றனர்.

உள்ளது உள்ளபடி

நியூஸ் 18 ஆங்கில தொலைகாட்சியில் போராட்டம் பற்றிய செய்திகள் உள்ளது உள்ளபடி அப்டேட் செய்யப்படுகின்றன. மதுரை, சென்னையில் இருந்து நேரடி ஒளிபரப்பவும் செய்கின்றனர்.

அரபு புரட்சியைப் போல

அரபு நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு எதிராகப்  புரட்சி நடைபெற்றது. அப்போது கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தோடு ஜல்லிக்கட்டு போராட்டத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒப்பிட்டுள்ளனர். மேலும் சில ஆங்கில நாளிதழ்களும்.

மோடியின் விரோதம்

ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் நடத்துவதில் நரேந்திரமோடி அரசு தமிழர்களுக்கு விரோதமாக இருக்கிறது என்று பர்ஸ்ட் போஸ்ட் ஆங்கில இணையதளம் வர்ணிக்கிறது.

அல்ஜசீரா தொலைக்காட்சி

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டத்துடன் ஒப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளின்போது காளைகளின் கண்கள்மீது மிளகாய் பொடி தேய்த்தும், சாராயம் கொடுத்தும் துன்புறுத்தப்படுவதாக குற்றசாட்டு இருப்பதையும் கூறி உள்ளது.

வாஷிங்டன் போஸ்ட்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் ஜல்லிக்கட்டு என்பது தமிழகத்தின் கலாசாரப் பின்னணி கொண்டது என்று வர்ணித்துள்ளது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் பேட்டியையும் வெளியிட்டிருக்கிறது.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களை வெளியிட்டிருக்கின்றனர். ஸ்பெயினில் நடக்கும் எருது விளையாட்டுடன் ஜல்லிக்கட்டை ஒப்பீடு செய்து செய்தி வெளியிட்டிருக்கின்றனர். எருது விளையாட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஸ்பெயினில் நீண்டகாலமாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், ஈழத் தமிழர் ஆதரவு போராட்டங்களின் போது சில தேசிய ஊடகங்கள் தமிழர்கள் உணர்வுகளை கிண்டல் செய்து வெளியிட்டன. இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எழுச்சியைப் பெரும்பாலான ஊடகங்கள் வரவேற்றுள்ளன. எதிர்காலத்தில் தமிழர் உரிமைகளை வென்றெடுக்க இந்த மாற்றம் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கட்டும்.

- கே.பாலசுப்பிரமணி