Published:Updated:

காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

Published:Updated:
காந்தியை விஞ்சிய காந்தியவாதி! - ஜே.சி.குமரப்பா நினைவுநாள் சிறப்புப்பகிர்வு!

டந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதிக்கு பிறகு நாட்டில் இருக்கும் பொருளாதார மேதைகளின் எண்ணிக்கை அதிகம் ஆகிவிட்டது எனலாம். அதற்கு முன்பு பொருளாதாரம் பற்றிய செய்திகளை படித்திடாதவர்கள் கூட, அது பற்றி தேடித்தேடி படித்தனர். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்பு, தொலைக்காட்சிகள், இணையதளங்கள், செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் என அனைத்துமே பொருளாதார அறிஞர்களின் கருத்துக்களால் நிரம்பி வழிந்தன. ஆனால் தற்போது நமக்கு அருகில் இருக்கும், ஏ.டி.எம்.,களில் இயல்பு வாழ்க்கை திரும்பியதுமே நாம் அதுகுறித்தெல்லாம் மறந்துவிட்டோம். மனிதனின் மகத்தான குணங்களில் ஒன்றுதான் இந்த 'மறதி'. ஆனால் நாம் கவலைப்படா விட்டாலும் கூட, நாம் மறந்துவிட்டாலும் கூட, நம் நாட்டின் பொருளாதாரம் இந்த நொடிகளில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. அதுதான் இன்றும், நம் மக்களை இயக்கிவருகிறது. இதுபோல நாம் காலப்போக்கில் மறந்துவிட்ட, ஆனால் தற்போதும் நமக்கு தேவைப்படக் கூடிய பொருளாதாரக் கொள்கைகளில் ஒன்று, காந்தியப் பொருளாதாரம். அதற்காக நாம் நினைவு கூறவேண்டிய தீர்க்கதரிசி ஜே.சி.குமரப்பா. 

மகாத்மா காந்தியின் நினைவு நாளான, இன்றுதான் காந்தியப் பொருளாதார அறிஞரான குமரப்பாவின் நினைவு நாளும் கூட. கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என சொன்னவர் காந்தி. அந்த கிராமங்களுக்கான பொருளாதாரக் கொள்கைகளை தந்தவர் குமரப்பா. 

1892-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் குமரப்பா. இவரது இயற்பெயர் ஜோசப் செல்லதுரை கொர்னலியஸ். பள்ளிப்படிப்பை சென்னையிலும், உயர்கல்வியை லண்டனிலும் பயின்று, அங்கேயே சில காலம் பணியாற்றினார். பின்னர் அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் படிப்பதற்காக சேர்ந்தார். அப்போது, 'இந்தியா ஏன் வறுமைப்பட்டது?' என்ற தலைப்பில் இவர் ஆற்றிய உரை, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியிடப்பட்டது. பிறகு இந்தியாவின் நிலையை ஆய்வு செய்த குமரப்பா, 1927­-ல் இந்தியா திரும்பினார். தான் மேற்கொண்ட ஆய்வு குறித்து காந்தியிடம் உரையாடினார். காந்தியின் வேண்டுகோளின் பேரில், குஜராத் கிராமங்களின் பொருளாதாரம் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிறகு காந்தியடிகள் உப்பு சத்தியாக்கிரகம் போராட்டத்தில் ஈடுபட்ட போது, யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பாவை நியமித்தார். அப்போது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்தார் குமரப்பா. இதனால் பின்னாட்களில் சிறை சென்றார். கிராமங்கள் தொடர்பாக காந்தி கண்ட கனவிற்கு நிகராக, கிராமியப் பொருளாதரத்தை முழுமையாக நம்பியவர் குமரப்பா. கிராமங்களில் இருக்கும் தொழில்களும், கிராமங்களில் விளையும் பொருட்களும் கிராமங்களுக்கே முழுமையாக பயன்பட வேண்டும் என்றார். இதனால் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெறும் என்பதே அவரது கொள்கை. உணவுக்கான பயிர் விளைய வேண்டிய இடத்தில், பணப்பயிர்கள் விளைவதையும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் புகையிலை விளைவதையும் அவர் எதிர்த்தார். இயற்கை வளங்களை அழித்துவிட்டு, அதன்மீது நடைபெறும் பெருந்தொழில்களை அவர் எதிர்த்தார். இயற்கையை எதிர்த்து நடக்கும் தொழில்கள், நீண்ட நாட்களாக நடக்க முடியாது எனவும், இயற்கையோடு இணைந்த தொழில்களே பலநூறு ஆண்டுகள் தொடரும் என்றும் கூறினார்.

ஆனால் தற்போது நாம் அந்தக் கட்டத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். மனிதன் சிதைக்காத இயற்கை வளம் என ஒன்று இந்த பூமியில் இருக்கிறதா என்ன? தனது பொருளாதாரக் கொள்கைகளை ஒட்டுண்ணிப் பொருளாதாரம், சூறையாடும் பொருளாதாரம், கூட்டிணக்க பொருளாதாரம், சேவைப் பொருளாதாரம், முனைவுப் பொருளாதாரம் என ஐந்து வகையாக பிரித்தார். இவற்றில் சேவைப் பொருளாதாரம் என்பதனை நோக்கியே இந்தியா இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பசுமைப் புரட்சி இந்தியாவில் துவங்கிய போது, இயற்கை உரங்களுக்கு பதில் இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை அவர் கண்டித்தார். 'டிராக்டர் நிலத்தை உழும்...ஆனால் சாணி போடுமா?' என்பார்கள். மாடுகளுக்கு பதில், உள்ளே நுழையும் டிராக்டர்கள் மனித உழைப்பை பறிக்கின்றன. இதனால் வேலை வேளாண்மையில் இருந்து மனிதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். அத்துடன் நிலத்தை உழும் மாட்டையும் அது வெளியேற்றுகிறது. இதனால் மாட்டிடம் இருந்து கிடைக்கும் சாணம் போன்றவை கிடைக்காமல், விவசாயி இரசாயன உரங்களை நோக்கி செல்கிறார். இது விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துகிறது. அவனை மேலும் கடனாளியாக்குக்கிறது என இதனை எதிர்த்தவர் குமரப்பா. 

இன்று கொஞ்சம் உங்களை சுற்றிப் பாருங்கள். உங்களை சுற்றியிருக்கும் தொழிற்சாலைகளை பாருங்கள். எங்கோ, ஏதோ ஒரு நாட்டில் அணிவதற்கான டீ-ஷர்ட்கள், காலனிகள், மின் சாதனங்கள் நம்மூரில் தயாராகின்றன. அதற்கான தொழிற்சாலைகள் நம்மை சுற்றியும் இருக்கின்றன. அவை நம் இயற்கை வளங்களை சிதைக்கிறது. வணிகம் என்ற பெயரில் இவற்றை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் மினரல் வாட்டர் அல்லது குளிர்பானங்கள் குடிப்பவர் என்றால்  உங்கள் பாட்டிலில் இருக்கும் முகவரியை கொஞ்சம் பாருங்களேன். ஏதோ ஒரு இடத்தில் உற்பத்தியான நீர், தற்போது உங்கள் தொண்டையை நனைக்கிறது. இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லைதான். ஆனால் அது ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு விவசாயியின் பயிருக்கான தண்ணீர் அல்லவா? தேவைக்கு அதிகமாக விளைவிக்கப்படும் பணப்பயிர்கள் அனைத்தும், உணவுப் பயிர்களுக்கு மாற்றாக வளர்ந்து கொண்டிருப்பவைதானே? உங்கள் கிராமத்திற்கான பொருட்கள், உங்கள் கிராமத்தில் விளைவதில்லை அல்லது உருவாவதில்லை எனில் உங்கள் கிராமத்தின் உழைப்பு, எங்கு யாருக்கு செல்கிறது? இவை எல்லாவற்றையும்தான் கேள்வி கேட்கிறார் குமரப்பா. எளிமையிலும், கொள்கையிலும் காந்தியை விஞ்சிய காந்தியவாதியாகத் திகழ்ந்தார். 

'ஒரு குறிப்பட்ட பகுதியில் ஒரு திட்டத்தை நிறைவேற்றும் முன்பு, அங்கே இருக்கும் ஏழைகளின் விலா எலும்புகளை எண்ணுவேன். அந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்பு, அதே ஏழைகளின் விலா எலும்புகளில் ஏதேனும் சதைப்பற்று காணப்படுகிறதா எனப் பார்ப்பேன். அப்படி காணப்பட்டால் அந்த திட்டம் வெற்றி எனக் கருதுவேன்" என்றார் குமரப்பா. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் வளர்ச்சித் திட்டங்களை இந்த அளவுகோலில் வைத்துப் பார்க்கும் போது, நாம்தான் அவர்களின் எலும்புகளை எண்ண வேண்டும் போல!

- ஞா.சுதாகர்.


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism