Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
தலையங்கம்

கோவை மாநகராட்சி மன்றத்தில், எந்தத் தலைவரின் படம் இருக்கலாம்; இருக்கக் கூடாது என்று இரு பெரும் திராவிடக் கட்சிகளின் உறுப்பினர்கள் மோதிக்கொண்ட நாராசக் காட்சி அண்மையில் அரங்கேறியது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதோ, உள்ளாட்சித் தேர்தல்களுக்கான முஸ்தீபுகளில் எல்லாக் கட்சிகளும் இப்போதே இறங்க ஆரம்பித்துவிட்டன. மாநில அளவிலான ஆட்சி மாற்றமும் சேர்ந்துகொள்ள, மாநகராட்சி மன்றங்களில் போட்டிகளுக்கும் மோதல்களுக்கும் இனி பஞ்சம் இருக்காது.

மாநிலத்தை வழிநடத்தும் சட்டமன்றம் மற்றும் தேசத்தை வழிநடத்தும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நிறுத்தப்படும் வேட்பாளர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து, அவர்களுடைய சொத்துக் கணக்குகளை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்து, அதன் பிறகே அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம்கொண்ட நாம், உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த அளவுக்கு விழிப்பும் கவனமும் காட்டுகிறோமா? ஓட்டை சைக்கிளில் வந்து ஓட்டு கேட்டவர் கவுன்சிலர் ஆன பிறகு, கன ஜோராக சொகுசு காரில் பறப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மண் குடிசையில் வாழ்ந்த மாநகராட்சி மன்ற வேட்பாளர், மாட மாளிகையில் நின்று கையாட்டும் அபார வளர்ச்சியும் கண் எதிரில் நடக்கிறது.

சம்பாதிக்கும் வாய்ப்புகள், உள்ளாட்சி அமைப்புகளில் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக்கிடப்பதால்தான், தங்கள் கட்சிகளின் தலைவர்களுக்கு விசுவாசம் காட்டுவதாக வேஷம் போட்டுக்கொண்டு, இவர்கள் எல்லாம் மன்றக் கூட்டங்களில் மண்டை உடைப்பு வேலைகளில் இறங்குகிறார்களே தவிர, இவர்களுடைய போராட்டத்தில் எத்தனை சதவிகிதம் மக்கள் நலன் மீதான அக்கறை எதிரொலிக்கிறது?

எனவே, கட்சிகளின் தலைவர்கள் இந்த முறை கவனமாக உள்ளாட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறினால், வாக்காளர்கள் நூறு மடங்கு கவனத்தோடு அலசி ஆராய்ந்து, தவறான வேட்பாளர்களின் வாலை நறுக்க வேண்டும். 'ஆமாம். எங்கள் தீர்ப்பு எப்போதுமே தீர்க்கமானது’ என்று காட்டுவதற்கு, வரும் உள்ளாட்சித் தேர்தல்கள் நம் வாக்காளர்களுக்கு மற்றும் ஒரு வாய்ப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism