Published:Updated:

மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

Published:Updated:
மெரினாவுக்கு 144: என்ன சொல்கிறார்கள் மக்கள்..?

''எங்கெல்லாம் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தோன்றுவதை யாராலும் தடுக்க முடியாது" என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள் உலக புரட்சியாளர்கள். அப்படித்தான், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, கடந்த 17-ம் தேதி சென்னை மெரினாவில் தொடங்கிய போராட்டம், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒன்றிணைய வைத்தது. உரிமைக்கான ஒற்றை  அடையாளத்தைத் தாங்கிய இந்தப் போராட்டம் வெற்றிமுகத்தை தொட்டுக்கொண்டிருந்த வேளையில், போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் நுழைந்து விட்டார்கள் என்று தெரிவித்து, கண்மூடித்தனமான வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டது காவல்துறை.

'நான்கு மணி நேரம் அவகாசம் கொடுங்கள்' என்று கேட்டவர்களை பதம் பார்த்தது போலீஸாரின் லத்தி... போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களைப் பாதுகாக்க ஆதரவுக்கரம் நீட்டியவர்களும் எந்தவித பாரபட்சமும் இன்றி தாக்கப்பட்டனர். போலீஸார் தாக்கியதில் கர்ப்பிணி ஒருவரின் கரு கலைந்தது. முதியவர் ஒருவரின் கை உடைந்தது. மெரினாவை ஒட்டியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பொசுக்கப்பட்டது. அறவழியில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தைச் சிதைத்து சின்னாபின்னமாக்கியதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி உள்ளது. மீண்டும் அதேபோன்ற எழுச்சி எங்கே உருவாகி விடுமோ? என்று அஞ்சிய அரசு, மெரினா பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

அசாதாரண  சூழ்நிலை......!

"ஜனவரி 28-ம் தேதி நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, அதாவது 15 நாட்கள் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்" என்று சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மெரினா கண்ணகி சிலையில் இருந்து பட்டினப்பாக்கம் வரை ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி போலீசார் தலைகளாக தெரிகிறது. தடை உத்தரவை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அதே நேரத்தில் குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதற்காக வருபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் எந்தவிதத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தடை உத்தரவு காரணமாக, மெரினாவிற்கு வழக்கமாக நடைப்பயிற்சிக்கு வருபவர்களைக் கூட தற்போது அங்கு காண முடியவில்லை. இதனால் கடற்கரை பகுதியே வெறிச்சோடிக் கிடக்கிறது. தள்ளுவண்டியிலும், சைக்கிளிலும் அன்றாட வியாபாரத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்குவதற்காக குடும்பத்தோடு செல்லமுடியாமல் மக்கள் திண்டாடுகின்றனர். தடை விதிக்கப்பட்டுள்ள அந்தப் பகுதியில் தென்பட்ட சில பொதுமக்களிடம் பேசியபோது, "அறவழிப் போராட்டத்தின் வெற்றி பீடமாக பார்க்க வேண்டிய மெரினா பகுதியை பலி பீடமாக மாற்றும் முயற்சி அரங்கேறி விட்டது" என்று சொல்கிறார்கள்.

மக்களின் குரல் வளையை நெறிக்கும் செயல்

 "கடற்கரை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.அப்படியே இப்பகுதிக்கு

வந்தாலும் ஒருவித அச்ச உணர்வோடு கடக்க வேண்டியுள்ளது" என்கிறார் குடும்பத்தலைவியான தனலட்சுமி. "காவல்துறையின் இந்த செயல் மக்களின் குரல் வளையை நெறிக்கும் செயல்" என்றார் அவர்.

"144 தடை உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு, காஷ்மீரில் நடக்கும்  கலவரங்கள் போன்று சென்னையில் நடந்து விட்டதா?" என கேள்வி எழுப்புகிறார் மத்திய அரசு ஊழியரான கோல்டன் கிங் சந்திரன். "144 தடை உத்தரவு போடுவதற்கு என்று சில விஷயங்கள் உள்ளது. தமிழக மக்கள் பாரம்பர்ய உரிமைக்காக போராடினார்கள். அப்படி மீண்டும் மக்கள் பிரச்னைக்காக கூடி விடுவார்களோ என்று அடக்கவே போலீசார் 144 தடை உத்தரவு  போட்டிருக்கிறார்கள் என்று கருதுகிறேன்" என்றார்.

"சமூக வலைதளங்கள் வாயிலாக 'மீண்டும் கூடுவோம்' என்ற பதிவைப் பார்த்து பதறிப்போய்தான் காவல்துறை இந்த நடவடிக்கையை

எடுத்துள்ளது" என்று கூறுகிறார் மாணவர் மோகன். "ஞாயிற்றுக்கிழமை ஒருநாள்தான் எங்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. அந்த நாளில், நண்பர்களுடன் கூட்டமாக மெரினாவுக்கு வந்தால் எங்களை போலீசார் புகைப்படம் எடுக்கிறார்கள்.. நாங்கள் என்ன சமூக விரோதிகளா?" என்கிறார் அவர்.

மீண்டும் ஒரு மெரினா எழுச்சி உருவாகுமோ என்ற அச்சம்...

"இளைஞர்களின் எழுச்சிக் கூட்டம் மீண்டும் கூடுவதற்கான வாய்ப்பு  ஏதும் இல்லை. அவ்வாறு

இருக்கும்போது, 144 தடை உத்தரவு ஏன் போட வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகிறார் ஐ.டி ஊழியரான பிரபாகரன். "அதுவும் மண்டையைப் பார்த்து அடிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இங்கே கூடுவார்கள்?" என்று கேட்கிறார்.

மெரினா எழுச்சியைக் கண்டு அரசியல் கட்சிகள் அதிர்ந்து விட்டார்கள் என்கிறார் நடராஜன். "மீண்டும் ஒரு மெரினா எழுச்சி உருவாகுமோ என்ற அச்சம் ஆளும் அரசியல் கட்சிகளுக்கு வந்து விட்டது. அதன் விளைவாகத்தான் 144 தடை உத்தரவு போட்டுள்ளார்கள்.. மிகப்பெரிய  புரட்சி, அந்தப் புரட்சியை ஒடுக்கப் பார்க்கிறது அதிகார வர்க்கம்" என்றார்.

"அனைவரும் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான வளத்தை இயற்கை கொடுத்துள்ளது. ஆனால் அவை அனைவருக்கும் சென்று  சேர்வதில்லை" என்றார் மஹாத்மா காந்தி. அவருடைய இந்த பொன்மொழி, அறவழியில் போராடிய மாணவர்களின் குரல்வளையை நசுக்கி இருப்பதற்கு பொருந்தி போய் விட்டது...

-கே.புவனேஸ்வரி