Published:Updated:

கழிவு நீர் தெருவில் விடப்பட்டால் அபராதம்... எவ்வளவு தூரம் சாத்தியம்?

கழிவு நீர் தெருவில் விடப்பட்டால் அபராதம்... எவ்வளவு தூரம் சாத்தியம்?
News
கழிவு நீர் தெருவில் விடப்பட்டால் அபராதம்... எவ்வளவு தூரம் சாத்தியம்?

கழிவு நீர் தெருவில் விடப்பட்டால் அபராதம்... எவ்வளவு தூரம் சாத்தியம்?

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் தெருக்களில் கழிவு நீர் விடும் வீட்டுக்காரர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டமசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டசபையில் நிறைவேறிய பிறகு அமலுக்கு வரும். இந்த மசோதாவின் படி,  கடைக்காரர்கள் தெருக்களில் சாக்கடையை விட்டால் 10 ஆயிரம் அபராதமும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும், வணிக வளாகங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சென்னை நகர் முழுவதும் குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்புகள் தரப்படுகின்றன. 2677 கி.மீ நீளத்துக்கு கழிவு நீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு கழிவு நீர் இணைப்புப் பெற வேண்டும் எனில் குடிநீர் வடிகால் வாரியத்தின் அலுவலகத்தில் விண்ணப்பம் வாங்கி மனு செய்யவேண்டும். குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு இரண்டுக்கும் சேர்த்து 20 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பம் கொடுத்த இரண்டு வாரத்துக்குள்  இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணைப்புகள்  வழங்கப்படுவதில்லை. வேண்டுமென்றே இழுத்தடிப்பார்கள். மேலும் உரிய கட்டணத்துக்கு மேல் அதிக கட்டணம் பெற்றுக்கொண்டே இணைப்புகள் தருவார்கள்.

சட்டத்தை எப்படி அமல்படுத்தப்போகிறார்கள்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை மாநகராட்சி பெருநகர மாநகராட்சி ஆவதற்கு முன்பு 150 வார்டுகளில் மட்டும் கழிவு நீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. இப்போது பெருநகர மாநகராட்சி ஆன பின்னர் புறநகர் பகுதிகளில் முழுமையாக இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளைத் தவிர ஏற்கனவே இருக்கும் வார்டுகளில் மட்டும்தான் இப்போது கழிவு நீர் இணைப்புகள் இருக்கின்றன. புறநகர் பகுதிகளில் வளசரவாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் மட்டும்தான் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெருங்குடி, தாம்பரம், பல்லவாரம் போன்ற பகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தப்படவில்லை.

முறையான சாக்கடை வசதிகள் செய்யப்படாத நிலையில் குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளில் உபயோகிக்கும் நீரை பூமிக்கு அடியில் சேகரித்து, அவ்வப்போது லாரிகள் மூலம் வெளியேற்றுகின்றனர். மாதம் தோறும் கழிவு நீரை லாரிகள் மூலம் எடுப்பதற்கு கணிசமான அளவுக்கு பணம் செலவு செய்கின்றனர். பெரும்பாலான குடியிருப்பு வாசிகள் தெருக்களில் அப்படியே சாக்கடை நீரை விடுகின்றனர். இதனால், தெருக்களில் சாக்கடை தேங்கி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. ஆனால், எந்த ஒரு வசதியும் செய்யப்படாத நிலையில் தெருவில்தான்  விட வேண்டிய சூழல் இருக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். சாக்கடை தண்ணீரை வெளியேற்ற முறையான வசதிகள் முழுமையாக செய்து முடித்தபிறகுதான் இது போன்ற சட்டத்தை அமல்படுத்த முடியும் என்கின்றனர்.

ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் மக்களிடம் அதிருப்தி ஏற்படும். எனவே சட்டத்தை மட்டும் சபையில் நிறைவேற்றி விட்டு அதனை இப்போதைக்கு இதை அமல்படுத்தும் வாய்ப்புகள் குறைவு என்று சொல்கின்றனர். தவிரவும், இந்தச் சட்டத்தை பயன்படுத்தி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

-கே.பாலசுப்பிரமணி