Published:Updated:

சின்னம்மா முதல்வரானால்..? - இனி என்னலாம் நடக்கும் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சின்னம்மா முதல்வரானால்..? - இனி என்னலாம் நடக்கும் தெரியுமா?
சின்னம்மா முதல்வரானால்..? - இனி என்னலாம் நடக்கும் தெரியுமா?

சின்னம்மா முதல்வரானால்..? - இனி என்னலாம் நடக்கும் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'விரைவில் சசிகலா நடராஜன் என்கிற சின்னம்மா  தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார்'ங்கிற நியூஸைக் கேட்டதும் அப்டியே ஷாக் ஆகிட்டேன். படிச்சுப் பாருங்க உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்...

எப்படியும் சசிகலா முதல்வர் ஆனதை வாழ்த்தி ரத்தத்தின் ரத்தங்கள் லட்சகணக்கில் பேனர் அடித்து ஆலந்தூரில் இருந்து அம்பத்தூர் வரைக்கும் வரிசையாக மாட்டிவிடுவார்கள். அதை டிராஃபிக் ராமசாமி போன்றோர் கிழித்துவிடாத வகையில் பேனருக்கு ஒரு போலீஸ் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்.

வாழ்த்தி ஒட்டப்படும் போஸ்டர்களின் மேல் சிலர் நாட்டு மாட்டினம் போடும் ஏ1 வகை சாணத்தை அடித்து அசிங்கப்படுத்தவும், ஆடுகளை வைத்து போஸ்டர்களை தின்ன வைக்கவும் வாய்ப்புகள் இருப்பதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட ஆநிரைகள் மீண்டும் தற்போதைய அரசால் கைப்பற்றப்படும்.

டெல்லி நாடாளுமன்றத்தில் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு கண்டிப்பாக 'தேர் இஸ் எ சாங் அபவுட் அவர் சிஎம் இன் சக்கரைக்கட்டி - சோ ச்வீட் மூவி. சின்னம்மா சிலக்கம்மா நில்லு நில்லு நில்லு... ஒன்ஸ் அகைன் ஐ ரிப்பீட்..சின்னம்மா சிலக்கம்மா...' என பாடுவார் 'காஷ்மீர்' நவநீதகிருஷ்ணன். 

ஜெயா நியூசில்  பேட்டி கொடுப்பவர்கள் இனிமேல் ' மாண்புமிகு, சின்ன தங்கத்தாரகை, சின்ன இதயதெய்வம், சின்ன புரட்சி தலைவி, கழகத்தின் பொதுச்செயலாளர், அம்மாவின் சகோதரி, தமிழக முதல்வர் சின்னம்மா அவர்கள்' என்று தான் பேச ஆரம்பிப்பார்கள். அவ்வ்வ்...

ஜெயா நியூசில் இனி 'அம்மா நினைவிடத்திற்கு வந்த பார்வையிட்ட மங்கோலிய நாட்டு மக்கள், ரஷ்யா நாட்டின் ரோஷால் நகரத்திற்கு அருகில் உள்ள குக்கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது' போன்ற நியூஸ்கள் ஓரங்கட்டபட்டு 'சின்னம்மா இன்று காரம் கம்மியாக காலி ஃபிளவர் பக்கோடா சாப்பிட்டார்' போன்ற செய்திகள் வர ஆரம்பித்துவிடும்.

'ஒட்டு சிட்டு ஓணா முட்ட லைக் பண்ணலைனா டொம்மு, மென்டோஸ் மாமா, தில் இருக்குற ஆம்பளைங்க லைக் பண்ணாதீங்க' போன்ற முகநூல் பக்கங்களில் சின்னம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து மீம்ஸ் போடப்பட்டது' போன்ற செய்திகளையும் இனி அதிகம் காணலாம்.

அம்மா உணவகம், அம்மா கேபிள் வரிசையில் சின்னம்மா சிடி கடை வர வாய்ப்புள்ளது. 'இது அருமையான ஒரு திட்டம். இதனால், பல சிடி விற்பனையாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்' என விஷாலே ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோ போடுவார்.

இனி ' தலைவன்' பாஸ்  மாதத்திற்கு நான்கு படங்கள் நடித்து விமலின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கலாம். சின்னம்மாவின் உத்தரவால் மழை பொழிந்தது, டொனால்டு டிரம்புக்கே முன்மாதிரியாக திகழ்கிறார், சின்னம்மா நினைத்தால் சீனாவுக்கே அதிபராகலாம்' என அடிக்கடி பேசி, யாராவது இனி பதறவைப்பார்கள்.

-ப. சூரியராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு