Published:Updated:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

பிரதமர் மோடி

``முதல் 40-50 ஆண்டுக்கால இந்திய அரசியல் காங்கிரஸைச் சுற்றியே இருந்தது. நீங்களும் காங்கிரஸுடன் இருந்தீர்கள் அல்லது எதிர்த்தீர்கள். அடுத்த 20-30 ஆண்டுக்கால இந்திய அரசியல் பா.ஜ.க-வை சுற்றியே இருப்பதை நான் பார்க்கிறேன்." - பிரசாந்த் கிஷோர்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுக்கால ஆட்சி... வளர்ச்சியா? வீழ்ச்சியா?

``முதல் 40-50 ஆண்டுக்கால இந்திய அரசியல் காங்கிரஸைச் சுற்றியே இருந்தது. நீங்களும் காங்கிரஸுடன் இருந்தீர்கள் அல்லது எதிர்த்தீர்கள். அடுத்த 20-30 ஆண்டுக்கால இந்திய அரசியல் பா.ஜ.க-வை சுற்றியே இருப்பதை நான் பார்க்கிறேன்." - பிரசாந்த் கிஷோர்

Published:Updated:
பிரதமர் மோடி
``என் வாழ்க்கையில் எல்லாமே 130 கோடி மக்கள் தான். என்னுடைய வாழ்வு என்பது ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு. எனது அரசு எட்டு ஆண்டுகள் நிறைவு செய்கிற இந்த தருணத்தில் ஏழைகளுடைய கௌரவத்திற்காகவும், மரியாதைக்காகவும் தொடர்ந்து இந்த வாழ்வு அர்ப்பணிக்கப்படும்”
பிரதமர் மோடி

2014-ல் இருந்து 2019 வரை ஐந்து ஆண்டுகளும், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. இந்த எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் என்னென்ன சாதனைகள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன, சறுக்கல்கள் எவையெல்லாம் இருந்திருக்கின்றன என்கிற வாத, பிரதி வாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்கள் பலரும் வெவ்வேறு ஊடகங்கள் வாயிலாக தங்கள் கட்டுரைகளில் எட்டு ஆண்டு சாதனைகள் குறித்தும், இந்த ஆட்சியின் திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி, இந்த எட்டு ஆண்டுகளில் எட்டு மிகப்பெரிய தவறுகளை மோடி தலைமையிலான அரசு செய்திருக்கிறது என்று பட்டியலை வெளியிடுகிறது. இந்த பட்டியல்கள் போக அரசியல் விமர்சகர்கள் பார்வையில் சித்தாந்த ரீதியாக, கருத்தியல் ரீதியாக பா.ஜ.க கட்சி இந்த தேர்தல் பரப்புரைக்கு முன்னதாக கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்து அவை எல்லாம் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்கிறார்கள்.

மோடி ராமர் கோயில்
மோடி ராமர் கோயில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக ராமர் கோயில் கட்டுவது, குடியுரிமை சட்டத் திருத்தம், முத்தலாக் முறைக்குத் தடை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட கருத்தியல் சார்ந்த விவகாரங்களுக்கு இந்த அரசு தான் எடுத்த முடிவுகளை செயல்படுத்தி இருக்கிறது. பொருளாதார ரீதியாக வேலைவாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள், மக்களுக்கான திட்டங்கள், 2014 முன்னரே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற விஷயங்களுக்காக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால், இன்று இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டே இருக்கிற சூழலைப் பார்க்க முடிகிறது. இன்னொரு பக்கம் 2014-ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வேலை இழப்பு அதிகமா இருக்கிறது என்கிற விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.

அஜய் மக்கன் - ரன்தீப் சுர்ஜேவாலா
அஜய் மக்கன் - ரன்தீப் சுர்ஜேவாலா
ட்விட்டர்

``ஆட்சிக்கு வருவதற்கு முன் பா.ஜ.,வினர் வெளியிட்ட விதவிதமான கோஷங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது என தெரியவில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி, விண்ணை முட்டிக் கொண்டிருக்கும் நிலையில் நல்ல நாள்களாக எதை கருதுவது? ஊடக சுதந்திரம், பாலின வேறுபாடு, சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்க வளர்ச்சி, ஜனநாயக வளர்ச்சி, உணவு பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் சர்வதேச அளவில் இந்தியாவின் தரம், பலமடங்கு சரிந்து விட்டது.

பா.ஜ.க அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டில் சுமார் 10,000 ஆயிரம் மதக்கலவரங்கள் நடந்திருக்கின்றன. மதத்தை முன்வைத்து வன்முறை, கலவரங்கள் நடந்தால் பா.ஜ.க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டிருக்கிறது. இது நம் அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இதுதான் பா.ஜ.க-வினர் செயல் திட்டமாகும்” என, மோடியின் எட்டு ஆண்டுக் கால ஆட்சி குறித்து ‘8 சால் 8 சல், பாஜ்பா சர்க்கார் விபாஸ்’ என்கிற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் அஜய், செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், பிரதமர் மோடியோ பல திட்டங்கள் மூலமாக “புதிய இந்தியாவைக் கட்டமைக்கிறோம்” என்று கூறியிருப்பதோடு “மத்திய அரசுத் திட்டங்களில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஊழலைக் குறைத்துள்ளோம்” என்கிறார்.

மோடி
மோடி

``இதற்கு முன்பு அடுப்படியில் புகையைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இப்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதற்கான வசதி கிடைத்துள்ளது. 2014-க்கு முன்பு நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலை இருந்தது. இப்போது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. சர்ஜிகல் ஸ்ட்ரைக், ஏர் ஸ்ட்ரைக் குறித்து நாடு பெருமைப்படுகிறது. நாட்டில் பல தசாப்தங்களாக வாக்கு வங்கி அரசியல் மட்டுமே நடைபெற்றது. வாக்கு வங்கியின் அடிப்படையில் நடைபெற்ற அரசியல், நாட்டிற்கு ஏராளமான சேதத்தை உண்டாக்கியது. நாங்கள் வாக்கு வங்கிக்காக அல்லாமல், புதிய இந்தியாவைக் கட்டமைக்க பணியாற்றி வருகிறோம். பல்வேறு திட்டங்களின் பட்டியலிலிருந்த சுமார் 9 கோடி போலி பயனாளிகள் பெயரை நீக்கியுள்ளோம்” என்று சிம்லாவில் நடைபெற்ற ‘ஏழைகள் நல மாநாட்டில்’ தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய அரசியல் சூழலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸின் நிலைகுறித்து, `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடலில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் தன் கருத்துக்களைப் பகிரும் போது, “இந்திய அளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை நீங்கள் பெற்றுவிட்டால், உங்களை யாராலும் விரட்டியடிக்க முடியாது. இதுவொன்றும் தானாக நிகழ்ந்துவிடாது. அதேசமயம், வரும் தசாப்தங்களில் பா.ஜ.க ஓர் வலிமையான தேர்தல் கட்சியாக இருக்கும். அதற்காக ஒவ்வொரு தேர்தல்களிலும் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்று அர்த்தமல்ல. அதாவது, முதல் 40-50 ஆண்டுக்கால இந்திய அரசியல் காங்கிரஸைச் சுற்றியே இருந்தது. நீங்களும் காங்கிரஸுடன் இருந்தீர்கள் அல்லது எதிர்த்தீர்கள்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

அடுத்த 20-30 ஆண்டுக்கால இந்திய அரசியல் பா.ஜ.க-வை சுற்றியே இருப்பதை நான் பார்க்கிறேன். நீங்களும் பா.ஜ.க -வுடன் இருக்கிறீர்கள் அல்லது எதிர்க்கிறீர்கள். ஆனால், பா.ஜ.க தனித்து விடப்படும் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒன்று. பா.ஜ.க இருப்பதால் எதிர்க்கட்சியும் இருக்கவேண்டும். மக்களின் வாழ்வை பாதிக்கும் பிரச்சினைகளை அரசியல் கட்சிகள் கையிலெடுக்க வேண்டும். இந்த ஜனநாயகத்தில் விடாமுயற்சி எப்போதும் பலனளிக்கும்” என்று கூறியிருந்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism