Published:Updated:

மேஜையின்மீது ஏறி பூங்கோதை அமளி; சபாநாயகர் நாற்காலி, மைக் உடைப்பு- சட்டப்பேரவையில் பரபரப்பு!

Vikatan Correspondent

சட்டப்பேரவையில் சபாநாயகரை முற்றுகையிட்டு தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை, மேஜைமீது ஏறி அமளியில் ஈடுபட்டார். சபாநாயகரின் நாற்காலி, மைக் உடைக்கப்பட்டன. இதனால், அவையில் இருந்து சபாநாயகர் வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ராமசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்டவர்கள் பேசினர். முதல் பிளாக்கில் வாக்கெடுப்பு நடந்தபோது 38 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

தி.மு.க உறுப்பினர்கள், சபாநாயகரை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தி.மு.க உறுப்பினர் பூங்கோதை மேஜையின்மீது ஏறி அமளியில் ஈடுபட்டார். மேலும், ஆயிரம்விளக்கு தொகுதி தி.மு.க  எம்.எல்.ஏ  கு.க.செல்வம், சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். 

இதனிடையே, சட்டசபையில் தி.மு.க உறுப்பினர்கள், சபாநாயகர் நாற்காலி மற்றும் மைக்கை சேதப்படுத்தினர். மேலும், பேப்பர்களைக் கிழித்தும் சபாநாயகரை முற்றுகையிட்டும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, சபாநாயகர் தனபால் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, மதியம் ஒரு மணி வரை சட்டசபை சிறப்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.