Published:Updated:

'இனி, தமிழர்களின் நிலை கேள்விக்குறிதான்' - நல்லகண்ணு வேதனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'இனி, தமிழர்களின் நிலை கேள்விக்குறிதான்' - நல்லகண்ணு வேதனை!
'இனி, தமிழர்களின் நிலை கேள்விக்குறிதான்' - நல்லகண்ணு வேதனை!

'இனி, தமிழர்களின் நிலை கேள்விக்குறிதான்' - நல்லகண்ணு வேதனை!

'இனி, தமிழர்களின் நிலை கேள்விக்குறிதான்' - நல்லகண்ணு வேதனை!

பசு.கவுதமனின் "நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்" என்கிற நூலின் முன்வெளியீட்டு விழா, மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமைதாங்கினார். அப்போது பேசிய அவர், "இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் எவ்வளவோ வளர்ந்திருக்கு. ஆனா, அந்த வளர்ச்சி இந்த சமுதாயத்துக்கும், தனி மனிதனுக்கும் எந்த மாதிரியான விஷயங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

ஜெயலலிதா இறந்துபோனார். பெண்ணாகப் பிறந்து, சினிமாவில் நடித்து, ஆளுமை படைத்த முதலமைச்சர்னு பெருமையா பேசிட்டு இருந்தாங்க. 15 நாளுக்குள்ள இளைஞர்கள் பெரிய போராட்டம் நடத்தினாங்க. காவிரிப் பிரச்னையில் ஒன்பது வருடமா நடுவர் மன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை. இப்படியெல்லாம் இருக்கும் நிலையில், நமது ஆளும் அரசியல் எப்படி உள்ளது என்பதைப் பார்த்து விட்டோம். பெரியார் பெயர் சொல்லி திராவிடக்கட்சி என்று கூறிக்கொண்டு, துளி அளவும் பெரியாரின் கருத்துகளோடு ஒன்றாத இவர்களின் கைகளில் நம் தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

எட்டு நாள்களாக இளைஞர்கள் அமைதியான முறையில் போராடினார்கள். இன்னும் இவர்களது போராட்டம் தொடர்ந்தால், இனி எதற்கு எடுத்தாலும் போராடிவிடுவார்கள் என்கிற பயத்திலேயே அடித்து விரட்டினார்கள். படித்த இளைஞர்கள், ஒரு வாரமாக அமைதியான முறையில் போராடி வெற்றிபெற்றார்கள். ஆனால், சட்டசபையில் அமைதியான முறையில் ஒருநாள் வாக்கெடுப்புகூட அவர்களால் நடத்த முடியவில்லை. இவர்களை நம்பித்தான் நாம் இன்றளவும் இருக்கின்றோம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் மூன்று பேரும் குற்றவாளி என, உலகமே பாராட்டும் அளவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு ஒரு பக்கமும் நான் முதல்வராக வர வேண்டும் என்கிற கரகோஷமும் தானே நாடு முழுவதும் ஒலிக்கின்றது. இப்படிப்பட்டவர்களுக்காக, இப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலைகளில்தான் பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்றவர்கள் தேவை" என்று கூறினார்.

- வெ.வித்யா காயத்ரி

படங்கள் : க.விக்னேஷ்வரன்

(மாணவப் பத்திரிகையாளர்கள்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு