Published:Updated:

ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!
ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!

ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!

ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!

சட்டப்பேரவை நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தனபால், சட்டப்பேரவைச் செயலாளருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தயாரிக்க உள்ளார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமியிடம், பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்டது. அப்போது, ரகசிய வாக்கெடுப்பு  நடத்த வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதற்கு, சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார்.

கடும் அமளிக்கிடையே சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க உறுப்பினர்கள் வெளியேறாமல் சட்டப்பேரவைக்கு உள்ளேயே தர்ணாவில் ஈடுபட்டதோடு, சபாநாயகரின் மேஜை, மைக்கை உடைத்தனர். இதையடுத்து, அவைக் காவலர்களால் தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்களின் சட்டைகள் கிழிந்தன. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் முறையிட்டார்.

ஆளுநர் உத்தரவால் அறிக்கை தயாரிக்கும் சபாநாயகர்!

இந்நிலையில், சட்டப்பேரவையில் கடந்த 18-ம் தேதி  நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சபாநாயகர் தனபாலுக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். சட்டப்பேரவை நிகழ்வு குறித்து அறிக்கை தயாரிக்க, பேரவைச் செயலாளர் ஜமாலுதினுடன்  இன்று ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார் சபாநாயகர். இதனை அடுத்து, அறிக்கை தயார்செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு