Published:Updated:

அன்புமணியை விளாசிய அன்பழகன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அன்புமணியை விளாசிய அன்பழகன்!
அன்புமணியை விளாசிய அன்பழகன்!

அன்புமணியை விளாசிய அன்பழகன்!

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே, தி.மு.க எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டதற்கும், அவர்கள் சட்டசபையில் நடந்துகொண்டதற்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்துவருகின்றனர்.

அன்புமணியை விளாசிய அன்பழகன்!

இந்நிலையில்,  பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 'இது, ஜனநாயகத்துக்கு நேர்ந்த அவமானம். தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினருக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன், 'சட்டசபைக்குள் நுழைய மக்கள் அனுமதிக்காதவர்கள் எல்லாம், ஜனநாயகத்தைப் பற்றிப் பேசத் தகுதியில்லை' என்று கூறியுள்ளார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு