Published:Updated:

ஜெ. அறையை பன்னீர் பயன்படுத்தவில்லை; பழனிசாமி பயன்படுத்தினார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஜெ. அறையை பன்னீர் பயன்படுத்தவில்லை; பழனிசாமி பயன்படுத்தினார்!
ஜெ. அறையை பன்னீர் பயன்படுத்தவில்லை; பழனிசாமி பயன்படுத்தினார்!

ஜெ. அறையை பன்னீர் பயன்படுத்தவில்லை; பழனிசாமி பயன்படுத்தினார்!

ஜெ. அறையை பன்னீர் பயன்படுத்தவில்லை; பழனிசாமி பயன்படுத்தினார்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய முதல்வர் அறையை, எடப்பாடி பழனிசாமி இன்று பயன்படுத்தினார். ஜெயலலிதா இருந்த நாற்காலியில் அமர்ந்து முதல்வர் பொறுப்பை பழனிசாமி ஏற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா பயன்படுத்திய அறையைப் பயன்படுத்தவில்லை. தனி அறையில் அமர்ந்துதான் தனது பணிகளை மேற்கொண்டார்.

இந்நிலையில், தமிழக முதல்வராகப் பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார். இதையடுத்து, முதல்வராக இன்று பொறுப்பேற்க தலைமைச்செயலகம் வந்தார். ஜெயலலிதா பயன்படுத்திய அறையைப் பயன்படுத்துவாரா அல்லது பன்னீர்செல்வம் பயன்படுத்திய அறையைப் பயன்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ஜெயலலிதா பயன்படுத்திய அறையை எடப்பாடி பழனிசாமி இன்று பயன்படுத்தினார்.

ஜெயலலிதா அமர்ந்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து முதல்வர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படம்: ஜெரோம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு