Published:Updated:

பிரேக்கிங் செய்தி பரபரப்புகளின்போது, தோழர் நல்லகண்ணு என்ன செய்தார் தெரியுமா...?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரேக்கிங் செய்தி பரபரப்புகளின்போது,   தோழர் நல்லகண்ணு என்ன செய்தார் தெரியுமா...?
பிரேக்கிங் செய்தி பரபரப்புகளின்போது, தோழர் நல்லகண்ணு என்ன செய்தார் தெரியுமா...?

பிரேக்கிங் செய்தி பரபரப்புகளின்போது, தோழர் நல்லகண்ணு என்ன செய்தார் தெரியுமா...?

செப்டம்பர் 22-ம் தேதியில் இருந்து பிரேக்கிங், பிரேக்கிங் என்று தொலைகாட்சிகள் இடைவிடாமல் அரசியல் செய்திகளை அள்ளி வழங்கின. அரசியல்வாதிகளின் சுயரூபம் ஒவ்வொரு நிமிடமும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால், இந்தப் பரபரப்பிலும் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான 91 முதியவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளை-யை தடுக்க பசுமைத் தீர்ப்பாயத்தில் தனது வாதங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.  நல்லகண்ணுவை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

"தாமிரபரணியை பாதுகாக்கும் உங்களுடைய போராட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?"

"தாமிரபரணி மட்டும்தான் தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கிறது. வற்றாத ஜீவநதியாக இருந்தது. ஆனால், தாமிரபரணியில் நடந்த தொடர் மணல் கொள்ளையால் ஆற்றின் போக்கும், நீரோட்டமும் பாதிக்கப்பட்டுவிட்டது. இதைத் தடுக்க வலியுறுத்தி மதுரைக்கிளை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அதன்படி தாமிரபரணியில் 2010-ம் ஆண்டில் இருந்து 2015 வரை மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டது."

"ஶ்ரீவைகுண்டம் அணையிலும் மணல் கொள்ளை நடக்கிறதே?"

"ஶ்ரீவைகுண்டம் அணையில் நீர் ஆதாரத்தைப் பாதிக்கும் வகையில் மணல் அள்ளப்படுகிறது என பசுமை தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தேன். இது தொடர்பாக கடந்த 17-ம் தேதி எனது வழக்கறிஞர்கள் மோகன், அருணாசலம், ஆதித்யா, குமார் ஆகியோர் உதவியுடன் நானே வாதிட்டேன். எனது வாதத்துக்குப் பின்னர், பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜோதி, நீரியல் துறை ஆய்வாளர் ஆகியோர் மார்ச் 12, 13 தேதிகளில் வந்து ஶ்ரீவைகுண்டம் அணையைப் பார்வையிடுவதாகச் சொல்லி இருக்கிறார்கள்"  

"தமிழகம் வறட்சியின் பிடியில் தவிப்பதற்கு மணல் கொள்ளையும் ஒரு காரணமா?"

"தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக  மழை பெய்யவில்லை. கர்நாடகா, கேரளா இரண்டு மாநில அரசுகளும் தண்ணீர் தரவில்லை. காவிரி டெல்டாவில் 250 விவசாயிகள் இறந்துள்ளனர். இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில் தங்கு தடையின்றி மணல் கொள்ளை நடக்கிறது. அரசு அனுமதி அளித்த அளவுக்கு மேலே கூடுதலாக 2 யூனிட் மணலை லாரியில் ஏற்றுகின்றனர். விதிமுறையை மீறி 5 முதல் 6 மீட்டர் வரை மணல் அள்ளுகின்றனர். தொட்டனை தூறும் மணற் கேணி என்று திருக்குறள் சொல்கிறது. 1 கன அடி மணல் உருவாக 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தொடர்ந்து மணலை கொள்ளையடிக்கும்போது சேறுதான் மிஞ்சும். நிலத்தடி நீர் குறைந்ததால்தான் தமிழகத்தில் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய வறட்சிக்கு மணல் கொள்ளை ஒரு முக்கிய காரணம்தான்."

"தமிழகத்தில் உள்ள இப்போதைய அரசியல் சூழலில் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்குமா?"

"தமிழகத்தில் இவ்வளவு பெரிய அரசியல் நெருக்கடி இருந்தது இல்லை. தமிழகத்தில் நிலையான அரசு இல்லை என்பதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆளும் கட்சிக்குத்தான் இதற்குப் பொறுப்பு இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னை தீர்க்கப்படுகிறது. ஆனால் காவிரி தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை."

"இயற்கை வளங்களைக் காக்க இளைஞர்கள் போராட வேண்டுமா?"

"இயற்கை வளங்களைக் காக்க இளைஞர்கள் மட்டுமல்ல. அனைத்துத் தரப்பு மக்களும் முன் வரவேண்டும். இயற்கை வளங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். மக்களுடைய எழுச்சிப் போரட்டங்கள் வலுக்கவேண்டும். இளைஞர்கள் நல்ல எடுத்துக்காட்டாக செயல்பட வேண்டும்."

- கே.பாலசுப்பிரமணி
படங்கள்; ஶ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு