Published:Updated:

’கூவத்தூரைப் பாதுகாத்த போலீஸ்’ : எண்ணூரில் ஸ்டாலின் கொதிப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’கூவத்தூரைப்  பாதுகாத்த போலீஸ்’ : எண்ணூரில் ஸ்டாலின் கொதிப்பு!
’கூவத்தூரைப் பாதுகாத்த போலீஸ்’ : எண்ணூரில் ஸ்டாலின் கொதிப்பு!

’கூவத்தூரைப் பாதுகாத்த போலீஸ்’ : எண்ணூரில் ஸ்டாலின் கொதிப்பு!

எண்ணூரில் கொல்லப்பட்ட ரித்திகாவின் குடும்பத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். எண்ணூரைச் சேர்ந்த மீனவக் குடியிருப்பில், நேற்று மூன்று வயது சிறுமி ரித்திகாவின் உடல் குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை, சிறுமியை நகைக்காகக் கொலை செய்த ரேவதி என்ற பெண் கைதானார்.

’கூவத்தூரைப்  பாதுகாத்த போலீஸ்’ : எண்ணூரில் ஸ்டாலின் கொதிப்பு!


இந்நிலையில், சிறுமி ரித்திகாவின் குடும்பத்தினரைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அவர், ’தமிழகத்தில், அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு ரித்திகா கொலை ஒரு உதாரணம். சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்கவேண்டிய போலீஸ், கூவத்தூரில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டது. சட்டப்பேரவையில் எங்களைத் தாக்கவே காவல்துறை இருக்கிறது’, என்று குற்றம் சாட்டினார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு