Published:Updated:

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மெரினா சமாதியை அகற்ற வேண்டும், பாடநூலில் இருந்து ஜெயலலிதா படத்தை நீக்கி திருவள்ளுவர் படம் வைக்க வேண்டும், அரசின் அனைத்து நலத்திட்டங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என்ற  கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையினரின் அனுமதி பெறாததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அரசு அலுவலகங்களில் ஜெ. படத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த ஜெயலலிதா படம் மற்றும் பொருட்களை உடைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பூபாலன், கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு