Published:Updated:

சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு
சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

சிறையில் உள்ள சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறைத்தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து சசிகலா உள்பட மூன்று பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் பணியைத் தொடங்கினார். இதனிடையே, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று பெங்களூரு சென்றார். சிறையில் உள்ள சசிகலாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, கட்சியின் செயல்பாடு குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

சசிகலாவுடன், எடப்பாடி பழனிசாமி நாளை சந்திப்பு

இதனிடையே, சசிகலாவை நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வராக இருக்கும் ஒருவர், சிறையில் இருக்கும் ஒருவரை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு