Published:Updated:

ஈஷா வருகை: மோடிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஈஷா வருகை: மோடிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!
ஈஷா வருகை: மோடிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

ஈஷா வருகை: மோடிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

வருகின்ற 24-ம் தேதி சிவராத்திரியன்று, பிரதமர் மோடி கோவை ஈஷா யோக மையம் வருகிறார். அப்போது 112 உயர சிவன் சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 7 மொழிகளில் 23 சேனல்களுக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஷா யோக மையத்தின் மீது நில அபகரிப்பு வழக்கு,  யானை வழித்தடத்தை அழித்தது உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.

ஈஷா வருகை: மோடிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!

இதனால், மோடி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஈஷா யோக மையத்துக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வரும் சீனிவாசன் குப்புசாமி என்பவர், ஈஷா யோகா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என மோடியிடம் மனு அளித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு