Published:Updated:

கீழடி ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்! மு.க.ஸ்டாலின் நன்றி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கீழடி ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்! மு.க.ஸ்டாலின் நன்றி
கீழடி ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்! மு.க.ஸ்டாலின் நன்றி

கீழடி ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்! மு.க.ஸ்டாலின் நன்றி

கீழடி ஆய்வுப் பணிகள் மீண்டும் தொடக்கம்! மு.க.ஸ்டாலின் நன்றி

கீழடி ஆய்வுப் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவு பிறப்பித்துள்ள மத்திய கலாசார அமைச்சருக்கு, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழை வளர்த்த பெருமைமிக்க மதுரைக்கு அருகில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில், மத்திய தொல்லியல்துறைமூலம் நடத்தப்பட்ட அகழ்வாய்வில், தமிழக நாகரிகத்தின் அடையாளத்தை உணர்த்தும் வகையில் 5300-க்கும் மேற்பட்ட பல அரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. தமிழர்களின் நாகரிகம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் கிடைத்த அந்த கீழடி அகழாய்வுப் பணியைத் திடீரென்று மத்திய அரசு பாதியில் நிறுத்திவிட்டது என்று வெளிவந்த செய்தியின் அடிப்படையில், 06-01-2017 அன்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் டாக்டர்.மகேஷ் சர்மாக்கு கடிதம் எழுதி, “நிறுத்தப்பட்ட அகழாய்வுப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்தக் கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவிடம் கொடுத்து அனுப்பி, நேரடியாக மத்திய அமைச்சரிடம் கொடுத்து இந்த கோரிக்கையை வலியுறுத்தச் சொன்னேன்.

அப்போதே, “இந்தக் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்” என்ற உறுதியை மத்திய கலாசாரத்துறை அமைச்சர் அளித்திருந்தார். அவர் கொடுத்த வாக்குறுதியின்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று, கீழடி அகழாய்வுப் பணிகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டதற்கு மத்திய கலாசார அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு