வெள்ளையும் சொள்ளையுமாக கதர் அணிந்தவர் கள் குறுக்கும் நெடுக்கு மாக நடக்க, குல்லா அணிந்த தியாகிகள் கையில் கத்தையான காகிதங்களோடு காத்திருக்கிறார்கள். தேர்தலில் தோற்றாலும் பரபரப்பாகவே இருக்கிறது சத்தியமூர்த்தி பவன். ட்ரேட் மார்க் சிரிப்போடு கும்பிடு போட்டு அமர்கிறார் தங்கபாலு. தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி! (ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகும், இந்த இதழ் அச்சுக்குப் போகும் வரையிலும்!)

''தேர்தல் தோல்வியை எப்படி எடுத்துக்கிட்டீங்க?''

(சிரிக்கிறார்) ''ஒண்ணு மட்டும் நிச்சயம். கேரளா மாதிரி தமிழ்நாட்டு மக்களும் ஆட்சி அதிகாரத்தை மாத்தி மாத்திக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. எங்களுக்கு விஜயகாந்த்தோட மூன்றாவது அணி அமைக்க வாய்ப்பு இருந்தது. அ.தி.மு.க-வோட கூட்டணி அமைச்சு, இப்போ எதிர்க் கட்சி ஆகி இருக்கவும் முடியும். ஆனா, நாங்க தி.மு.க-வைக் கைவிட விரும்பலை. ஏன்னா, அவங்க எங்களோட பல வருஷமாக் கூட்டணியில் இருக்காங்க. ஒரு விஷயம் தெரியுமா... இந்தத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடையும்னு எனக்கு எலெக்ஷனுக்கு முன்பே தெரியும்!''

''தோத்துருவோம்னு தெரிஞ்சே, எதுக்கு கூட்டணிவெச்சீங்க?''

''அதுதான் கூட்டணி தர்மம். (அடேங்கப்பா!) ஜெயிப்போமா, தோற்போமான்னு தெரியாமலா, ஒரு தேசியக் கட்சிக்கு மாநிலத் தலைவரா இருப்பேன்! (நீங்க எப்பவுமே இப்படித்தானா... இல்லை, இப்படித்தான் எப்பவுமேவா?) காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. ஒவ்வொரு மாநிலத்துக்கும், அதற்குஏத்த சூழ்நிலைக்கு அரசியல் பண்ணணும். தனித்து ஆட்சி, கூட்டணி ஆட்சி, வெளியில் இருந்து ஆதரவுனு காங்கிரஸ் மேலிடம், அந்தந்த மாநிலச் சூழலை மனதில்வெச்சுதான் முடிவுகள் எடுக்கும். அந்த வகையில், தி.மு.க. கூட்டணி என்பது மேலிடம் எடுத்த முடிவு. காங்கிரஸ் தனித்து ஆட்சியைப் பிடிக்கணும். அல்லது காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையணும் என்பது எங்களின் கனவு. அதற்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டோம்!''

''இளைஞர் காங்கிரஸ் ஏகமா பில்ட்- அப் பண்ணாங்க. தி.மு.க-கிட்ட மல்லுக்கட்டி 63 சீட் வாங்கினீங்க. ஆனா, அஞ்சு சீட்தானே ஜெயிச்சீங்க?''

(கொஞ்சமாக டென்ஷன் ஆகிறார்) ''91-ல் வெறும் ரெண்டு சீட் ஜெயிச்ச தி.மு.க. திரும்ப ஆட்சியைப் பிடிச்சு இருக்கு. அடுத்த தேர்தலில் அ.திமு.க. நாலு சீட்தான் ஜெயிச்சது. அதுவும் திரும்ப ஆட்சியைப் பிடிச்சது. ஆனா, நாங்க அஞ்சு சீட் ஜெயிச்சு இருக்கோம். நாங்க மீண்டு வருவோம்... மீண்டும் வருவோம். எதிர்காலத்தில் தனிச்சு ஆட்சியைப் பிடிப்போம்!'' (அசத்தல் பாயின்ட் பிடித்த சந்தோஷத்தில் என்னைக் குறுகுறுவெனப் பார்க்கிறார்!)

''உங்களுக்குப் பிடிச்ச நடிகை யார்?''

''என்னங்க... பரபரப்பா பதில் சொல்லிட்டு இருக்கும்போது ரூட்டை மாத்துறீங்க? (வாய்விட்டுச் சிரிக்கிறார்). யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் பேரைச் சொன்னா, மத்தவங்க கோவிச்சுக்கப் போறாங்க. நல்லா நடிக்குற எல்லா நடிகையையும் பிடிக்கும்னு போட்டுக்கோங்க. நான் எப்பவாவதுதான் படம் பார்ப்பேன். பிரார்த்தனா டிரைவ்- இன் தியேட்டர்ல கார்ல உட்கார்ந்துட்டே படம் பார்க்கப் பிடிக்கும். கடைசியா 'எந்திரன்’ பார்த்தேன். இப்போ எதுவும் நல்ல படம் வந்திருக்கா?''

''ஜெயலலிதா எப்படி ஆட்சி பண்றாங்க?''

''பிள்ளை பிறந்த அன்னிக்கே பேர் வைக்கச் சொல்றீங்களே... ஆறு மாசம் போகட்டும். பார்த்துட்டுச் சொல்றேன்!''

''ஜெயலலிதா, 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியா அறிவிக்கணும்’னு தீர்மானம் கொண்டுவந்ததைப்பத்தி உங்க கருத்து?''

''நல்ல விஷயம்... அதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டில் ஈழப் பிரச்னைக்காக அதிகம் போராடின ரெண்டு பேர் யார் தெரியுமா? ஒண்ணு, பழ.நெடுமாறன். இன்னொண்ணு, நான். 1983-ல் இருந்து தமிழ் ஈழத்துக்காக நான் தனிப்பட்ட முறையில் போராடிட்டு இருக்கேன். லண்டன் மாநாட்டில் ஈழக் கொடி ஏத்தி இருக்கேன். பார்லிமென்ட்டில் 'தமிழ் ஈழம் இஸ் த ஒன்லி ஆன்ஸர்’னு பதில் சொல்லி இருக்கேன். உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா, பழ.நெடுமாறன்கிட்ட கேட்டுக்கோங்க!''

''உங்க இளமையின் ரகசியம் என்ன?''

''எனக்கு தண்ணி, தம்முனு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. (யோசிக்கிறார்) சிலருக்கு அது கெட்ட பழக்கம். சிலருக்கு அது நல்ல பழக்கம். அதனால தண்ணி, தம் பழக்கம் கிடையாதுன்னு மட்டும் போடுங்க. யோகா பண்ணுவேன். என் வயசு என்ன இருக்கும்னு சொல்லுங்க பார்ப்போம்?''

''ஒரு 50 டு 55 இருக்குமா?''

''60 ப்ளஸ் ஆச்சு. உங்களால கண்டுபிடிக்க முடியலைல்ல! இது வரைக்கும் யாருமே கண்டுபிடிச்சது இல்லை. அது தான் நம்ம ஃபிட்னெஸ் ரகசியம்! (கண்கள் மினுங்கக் குழந்தையாகக் குதூகலிக்கிறார்!) நான் சூப்பரா யோகா பண்ணுவேன். எங்கே இருந்தாலும் யோகாவை விடவே மாட்டேன். இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? நான் விவசாயி யோட மகன். ஏர் பிடிக்கிறதுல இருந்து களை எடுக்குறது வரை எல்லாமே தெரியும். சேலம் பக்கத்துல நிலம் இருக்கு. இப்பவும் நான் தனி ஆளா, காட்டுல இறங்கி விவசாயம் பண்ணுவேன்!''

''சேலம் பக்கத்துல எவ்வளவு நிலம் வெச்சிருக்கீங்க?''

''அந்த டீடெய்ல் உங்களுக்கு எதுக்கு? (சிரித்தபடி) தேவையான அளவு இருக்குதுங்க!''

''எப்பவும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையிலயே இருக்கீங்களே... போரடிக்கலையா?''

''இதே கேள்வியைத் தொண்டர்கள் நிறையப் பேர் கேட்டாங்க. என்ன செய்ய... அப்படியே பழகிருச்சு!

காலையில் சைக்கிளிங் போவேன். அப்போ மட்டும் டிராக் பேன்ட், டி-ஷர்ட் போடுவேன். மத்தபடி எங்கே இருந்தாலும், இதே காஸ்ட்யூம்தான். அரசியல்ல ஒரு நாளைக்கு நாலு செட் வேட்டி-சட்டை மாத்துற ஆளுங்க இருக்காங்க. ஆனா, நான் ரெண்டு செட் டிரெஸ்தான் மாத்துவேன். எளிமைதான் நம்ம அடையாளம்!''

'' 'கூடா நட்பு கேடாய் முடியும்’னு கலைஞர் சொல்லிஇருக்காரே?''

''நானும் படிச்சேன். எல்லாரும் எங்களைச் சொன்னதா நினைக்கிறாங்க. ஆனா, அவர் அந்த அறிக்கையில் ஒரு இடத்தில்கூட காங்கிரஸ் என்ற பேரை யூஸ் பண்ணலை. அதனால, அவர் எங்களைச் சொல்லலை. யாரைச் சொன்னாருன்னு இது வரைக்கும் தெரியலை!''

''ஸ்பெக்ட்ரம்ல வரிசையா தி.மு.க. தலைகள் உள்ளே போய்ட்டே இருக்கு... ஒவ்வொரு ராஜினாமா, ஒவ்வொரு அரெஸ்ட்டுக்குப் பிறகும், 'எங்க கூட்டணி பலமா இருக்கு’னு அறிக்கை விடுறீங்களே... எப்படி இது?''

''கூட்டணியில் இருந்தாலும், பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு. ஊழலற்ற, மதவாதம் இல்லாத மத்திய அரசை அன்னை சோனியா வழிகாட்டுதலின்படி நடத்திட்டு இருக்கார் மன்மோகன் சிங். கைதாகி உள்ள தி.மு.க. பிரமுகர்கள் குற்றம் சாட்டப்பட்டவங்கதான். குற்றம் சாட்டப்பட்டவர் எல்லாரும் குற்றவாளி கிடையாது. நீதிமன்றத் தீர்ப்புதான் குற்றவாளியா இல்லையான்னு முடிவு செய்யும். அதனால, எங்க கூட்டணி தொடருது. இப்பவும் சொல்றேன்... எங்க கூட்டணி பலமா இருக்கு... எங்க கூட்டணி பலமா இருக்கு... எங்க கூட்டணி பலமா இருக்கு!''