தமிழக அரசியல் சூழல்: குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக அரசியல் சூழல்: குடியரசுத் தலைவரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்துசெய்யக் கோரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்துகிறார்.
தமிழக சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, கடும் அமளி ஏற்பட்டது. மேலும், தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றார். இந்நிலையில், ரகசிய வாக்கெடுப்பு கோரிய எதிர்க்கட்சிகளை வெளியே அனுப்பிவிட்டு, நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்றும், தி.மு.க-வினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மு.க.ஸ்டாலின் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, மு.க. ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளார்.