Published:Updated:

இருபது குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி!

இருபது குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி!
இருபது குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி!

இருபது குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி!

இருபது குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி நிவாரண உதவி!

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

'வேலூர் மாவட்டம், புங்களூர் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்துகொண்டிருந்த பழனி என்பவரின் மனைவி ராஜம்மாள்; புதுக்கோட்டை மாவட்டம், முதுகுளம் கிராமத்தில் பனைமரம் முறிந்து விழுந்ததில் தர்மராஜ் என்பவரின் மகன் கருணாநிதி; விழுப்புரம் மாவட்டம், உலகாபுரம் கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்துகொண்டிருந்த துளசிராமன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி; நாகப்பட்டினம் மாவட்டம், கருப்பம்புலம் கிராமத்தைச் சேர்ந்த  முருகானந்தம் என்பவரின் மகன் செல்வன் சரவணகுமார்;

வேலூர் மாவட்டம், மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம் என்பவரின் மகள் பிரியங்கா என்கிற ஏகவள்ளி; திண்டுக்கல் மாவட்டம், தென்னம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் ராமசாமி; திருவள்ளூர் மாவட்டம், முக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் பாபு; நீலகிரி மாவட்டம், கோடநாடு, பான்காடு டிவிஷனைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின்  மனைவி வள்ளியம்மாள்; புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகள் ஆர்த்தி; சேலம் மாவட்டம், தெற்குக் காடு கிராமத்தைச் சேர்ந்த ராமர் என்பவரின் மகன் மாதையன்; நாகப்பட்டினம் மாவட்டம், பட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடைசாமி என்பவரின் மகள் அம்சம்;

சென்னை ராயப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகரில் கட்டடச் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த  மாசிலாமணி என்பவரின் மகன் தனசேகர்; பெரம்பலூர் மாவட்டம், மூங்கில்பாடி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி செய்துகொண்டிருந்த, வைத்தியலிங்கம் என்பவரின் மனைவி தவமணி; கடலூர் மாவட்டம், எடசித்தூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் வெற்றிவேல், சக்திவேல் என்பவரின் மகன் குமரவேல் மற்றும் ராயர் என்பவரின் மகன் கார்த்தி; தூத்துக்குடி மாவட்டம், இனாம் மணியாச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெகநாதன்; காஞ்சிபுரம் மாவட்டம், பல்லாவரம், சிக்கராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் தேவேந்திரன்; விருதுநகர் மாவட்டம், சின்னவாடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரின் மகன் சேகர்; கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன்புதூர், சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் சந்திரன் ஆகியோர்  பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு