
பெண்ணின் கையை வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை

பெண்ணின் கையை வெட்டியவருக்கு குளித்தலை நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் சீதா ஆறுமுகம். முன்விரோதம் காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு சீதாவின் கையை, பரமசிவம் என்பவர் வெட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் பரமசிவத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், பரமசிவத்துக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.