Published:Updated:

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்
'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

ல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கு கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. விதிகளை மீறி கட்டுமானங்களைக் கட்டிய புகாரிலும், வன அழிப்புப் புகாரிலும் ஈஷா மீது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சர்ச்சைக்குரிய ஈஷா விழாவில் கலந்துகொண்டு, விதிமீறிக் கட்டப்பட்ட சிலையைத் திறந்து வைக்கலாமா எனக் கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் இந்த விழாவுக்கு வந்தால் கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்த உள்ளதாகப் பல்வேறு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

இந்நிலையில் எதிர்ப்புகளை மீறி பிரதமர் மோடி கோவை வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையில் பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர். 'கோவைக்கு பிரதமர் நரேந்திரமோடி நாளை வருகிறார். அவரால் ஆதியோகி சிலை திறந்து வைக்கப்படுகிறது. நாத்திக, இடதுசாரி அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'பிரதமர் வந்து சிவன் சிலையைத் திறக்கலாமா?' எனக் கேட்கிறார்கள். பிரதமர் வந்து சிவன் சிலையைத் திறப்பதில் என்ன தவறு இருக்கிறது.

இவர்கள் அனைவரும் இந்து விரோதிகள் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறார்கள். காருண்யா பல்கலைக்கழகத்துக்கு சோனியா காந்தி வந்தாரே. அப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமருக்கென்று ஆன்மிகத் தேடல் இருக்கிறது. அரசாங்கம்தான் மதச்சார்பற்றது. ஆனால் பிரதமருக்கென்று மதமும் ஆன்மிகத் தேடலும் இருக்கிறது.

எல்லா இந்து எதிர்ப்பு சக்திகள் ஒன்றாக சேர்ந்து, பிரதமர் வருவதற்கும், சிலையைத் திறந்து வைக்கவும் எதிர்ப்பது இந்து எதிர்ப்பு நிலையையே காட்டுகிறது. இதை பாரதிய ஜனதா வன்மையாகக் கண்டிக்கிறது.

'பிரதமர் வருகை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது...' ஹெச்.ராஜா ஆவேசம்

பிரதமருக்கு மத விழாவில் கலந்துகொள்ள முழு உரிமை இருக்கிறது. அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமை இல்லை. காருண்யாவுக்கு சோனியா வந்தால் கேள்வி கேட்க மாட்டேன் என்கிறீர்கள். மோடி வந்தால் மட்டும் கேள்வி கேட்பதா? சோனியா என்றால் பயம். மோடி என்றால் உங்கள் இஷ்டத்துக்குப் பேசுவீர்களா?

ஈஷா நிறுவனம் மலைத்தள பாதுகாப்புக் குழுமத்தில் முறையான அனுமதி பெறவில்லை என்கிறீர்கள். அப்படி விதிமீறல் இருந்ததாகத் தெரியவில்லை. சுற்றிலும் மாநில அரசின் சாலைகள் உள்ளன. மலையை, வனத்தை ஈஷா அழிக்கவில்லை. ஈஷாவில் அனுமதியில்லாமல் கட்டடம் கட்டப்பட்டால் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதற்காக பிரதமரின் வருகையைக் கேள்வி கேட்பதா? சிவராத்திரி விழாவில் பிரதமர் வரக்கூடாது எனச் சொல்பவர்கள் இந்து விரோதிகள். பிரதமர் வருகையை  யாரும் கேள்வியே கேட்கக்கூடாது" என்றார்.

- தி.விஜய்

அடுத்த கட்டுரைக்கு