Published:Updated:
நிதி அமைச்சரானார் ஜெயக்குமார்! பழனிசாமி அமைச்சரவையில் முதல் மாற்றம்

நிதி அமைச்சரானார் ஜெயக்குமார்! பழனிசாமி அமைச்சரவையில் முதல் மாற்றம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நிதி, திட்டம், ஊழியர், நிர்வாக சீர்திருத்தம் ஆகிய துறைகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழனிசாமியின் பரிந்துரையின் பேரில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜெயக்குமாருக்கு கூடுதலாக இந்த இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் ஜெயக்குமார் நிதி அமைச்சர் ஆகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையில் நிகழும் முதல் மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது.