Published:Updated:

சட்டை கிழியாது... சண்டை வராது... - திருநாவுக்கரசர் அ.தி.மு.கவுக்குப் போனால்?!

சட்டை கிழியாது... சண்டை வராது... - திருநாவுக்கரசர் அ.தி.மு.கவுக்குப் போனால்?!
சட்டை கிழியாது... சண்டை வராது... - திருநாவுக்கரசர் அ.தி.மு.கவுக்குப் போனால்?!

சட்டை கிழியாது... சண்டை வராது... - திருநாவுக்கரசர் அ.தி.மு.கவுக்குப் போனால்?!

திருநாவுக்கரசர் அ.தி.முக.வுக்கு தாவுவாரா இல்லையான்னு அவருக்கே தெரியலை. ஆனா அவரை அ.தி.மு.கவுக்குள்ள தள்ளிவிடுறதுக்கு அல்லும்பகலும் வெறித்தனமா வேலை பார்த்துக்கிட்டு இருக்கார் இளங்கோவன். சரி, ஒருவேளை அ.தி.மு.கவுக்கு இப்போ போனார்னா என்னலாம் நடக்கும். சும்மா ஒரு கற்பனை..!

சும்மாலாம் இப்போதைக்கு அ.தி.மு.கவில்  வந்து பெரிய ஆள் ஆகமுடியாது. அதுக்கு தியான முறை, சத்தியவாக்கு, வற்புறுத்தினார்கள் பேட்டி என சில விதிமுறைகளுடன் ஸ்டெப் பை ஸ்டெப்பாகத்தான் போகணும். (அப்போதான் தனித்தனியா நாலஞ்சு பிரேக்கிங் நியூஸும் கிடைக்கும்.) இதுக்கு கடந்த சிலவாரங்களில் நடந்த மெரினா நாடகங்களையே ரெஃபரன்சா வச்சு பயிற்சி எடுத்து பட்டி டிங்கரிங்க்லாம் பாத்து அங்கே போனா ரெட் கார்பெட் விரிச்சு ரத்தத்தின் ரத்தமாக்கிக்கிருவாங்க..

திருநாவுக்கரசர் அ.தி.மு.கவுக்கு வந்துட்டா இப்போ பெரிய பஞ்சாயத்தா ஓடிட்டு இருக்குற 'சட்டமன்றத்திலே என்னோட சட்டையைக் கிழிச்சிட்டாங்க மக்களே...'ங்கிற சண்டையெல்லாம் வரவே வராது. ஏன் அவரு அவ்வளவு பெரியஆளா அப்படின்னு மட்டும் அவசரப்பட்டுக் கேட்டுடாதீங்க மக்களே. அதாவது. காங்கிரஸ் ரெஃபரன்ஸ் அவர்கிட்ட அதிகமாக அடிச்சுத் தாக்குறதால வேட்டி கிழிப்புகள்தான் பெரும்பாலும் நடக்க வாய்ப்பு இருக்குது. வேட்டி கிழிஞ்சா என்ன, எப்படியோ  சட்டை கிழியாம இருந்தா சரித்தானே மக்களே.. அதானே இப்ப பிரச்னை.

.தி.மு.கவிலே நடக்கும் தலைமைப் பதவி போட்டிகள் எல்லாம் இவர் வந்ததுக்குப் பின்னாடி  இன்னும் ஜரூராக நடந்து மக்களுக்கு இருக்கின்ற என்டெர்டயின்மெண்டுகளுக்கு எள்ளளவும் பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளப்படும். எதிர்க்கட்சிகள் யாராவது எதிக்கேள்வி கேட்டாலும் 'என்ன பாக்குற அ.தி.மு.கவெல்லாம் எப்பவாச்சும்தான் சண்டை போடும். நாங்களாம் எப்போதுமே சண்டை போடுறதை தொழிலாகவே வச்சிருக்க தமிழ்நாடு காங்கிரஸ்ல  இருந்து வந்தவிய்ங்க போவியா... போயி எஸ்டிடீயைப் புரட்டிப்பாரு'னு கெத்து காட்டுவார் திருநாவுக்கரசர்.

 அ.தி.மு.கவுக்குள்,' மாண்புமிகு அம்மா முதல்வர் பதவியிலேயே இல்லாதபோது ஒருநாள் மதியம் 2மணிவாக்குல'.. என சசிகலா ஒருபக்கம் கதை சொல்லிக்கொண்டிருக்க..' மாண்புமிகு  இதயதெய்வம், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை அம்மா  முதல்வராக இருந்தபோது ஒரு பொதுக்கூட்டத்திலே..' என ஓ.பி.எஸ் ஒரு புறம் கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போது.  'கூவத்தூர் கோவில், கழகத்தின் காவல்,  மாண்புமிகு சின்னம்மா இப்படித்தான் ஒரு அறிக்கையில் என ஈ.பி.எஸ் மறுபுறம் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டிருக்க.. 'இப்படித்தான் புரட்சித்தலைவர் காலத்துல பார்த்தீங்கனா..' என தண்ணி இல்லாத காட்டுக்குள் தனி ட்ராக்கில் வண்டி ஓட்டிக்கொண்டிருப்பார் திருநாவுக்கரசர்.

லாங்க் ஜம்ப், ஹைஜம்ப் ஸ்போர்ட்ஸ்மேன்களே தோற்குமளவுக்கு பல கட்சிகளிலிருந்து தாவி வந்தவர்ங்கிற பெருமையை உடையவரான இவர் அ.தி.மு.கவுக்கு தாவும்போது, ஏற்கனவே பல கட்சிகளிலிருந்து தாவி இப்போது அங்கே இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் இவருக்கும் செம டஃப் காம்பெடிசனாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 'உனக்கு இது எத்தனாவது நாலாவது; இதுக்கு நீ எத்தனாவது ஏழாவது..'ங்கிறது மாதிரி யார் அதிகமாக அணி மாறியவர்கள்னு பாக்கலாமா.. பாக்கலாமா.. என அடிக்கடி மாறிமாறி அறிக்கை விட்டுக்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது மக்களே..

னா ஒண்ணு காங்கிரஸ்ல இருந்து இவரு  அ.தி.மு.க வுக்கு மாறுனா அ.தி.மு.கவுல ரகளை இருக்குமா, இருக்காதாங்கிறதெல்லாம் தெரியாது. இவர் வெளியில வந்துட்டா கண்டிப்பாக காங்கிரஸ்ல அடுத்த செம ரகளை காத்துக்கிட்டு இருக்குதுங்கிறது மட்டும் வெரிஃபைட்  நியூஸ் மக்களே.. ஏன்னா சோர்ஸ் சொல்லுது சோர்ஸு. ஆ...ங்.

- ஜெ.வி.பிரவீன்குமார்

அடுத்த கட்டுரைக்கு