Published:Updated:

’பெட்ரோல் விலை உயர்வு:மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு’

விகடன் விமர்சனக்குழு
’பெட்ரோல் விலை உயர்வு:மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு’
’பெட்ரோல் விலை உயர்வு:மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு’
’பெட்ரோல் விலை உயர்வு:மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு’

சென்னை:எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையை உயர்த்தியது என்று  மத்திய அரசு,பொது மக்களின் காதில் பூ சுற்றுவதாக தே.மு.தி.க. தலைவர்  விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”மத்தியில் காங்கிரஸ் தலைமையில்  நடைபெறுகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான பொருளாதார  கொள்கையாலும், எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயம் செய்து கொள்ள  அனுமதி அளித்துவிட்டு, எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விலையை  உயர்த்தியது என்று பொது மக்களின் காதில் பூ சுற்றுகின்ற மத்திய அரசு, வரலாறு  காணாத வகையில் பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு 7 ரூபாய் 50 காசுகள் என  அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு  பதவி ஏற்று மூன்று ஆண்டு காலத்தில் 16 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதன்  காரணமாக சுமார் 44 ரூபாய் இருந்த பெட்ரோல் விலை, இன்று சுமார் 79 ரூபாய் என்ற  அளவில் 80 சதவிகிதம் உயர்ந்துள்ளது.மத்திய, மாநில அரசுகளின் கடுமையான  வரிவிதிப்பின் காரணமாக பெட்ரோலின் விலையில் பாதிக்கு மேல் வரியாக செல்கிறது.

விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வினை மத்திய அரசு  கட்டுப்படுத்த தவறியதன் காரணமாக ஏற்கனவே மக்கள் பெரும்  அவதிக்குள்ளாகியுள்ளனர்.மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தவுடன்  பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.இது நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சியில்  அமரவைத்த பொது மக்களின் முதுகில் குத்தியதாகத்தான் நான் கருதுகிறேன்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களான இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோவில்  பிரயாணம் செய்பவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இந்த அநியாய விலை  ஏற்றத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விலை உயர்வை  திரும்பப் பெற வேண்டும்.இல்லையெனில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீது  விதித்துள்ள அளவுக்கு அதிகமான வரியைக் குறைப்பதன் மூலம் பெட்ரோல் விலையை  குறைக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.