Published:Updated:

ஜெ.மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை1

ஜெயலலிதா மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும் என்று ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் ஆவேசமாகப் பேசினார்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னை ஆர்.கே.நகரில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. ஒன்றரைக் கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்டதுதான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும். அதை நம்மிடத்தில் தந்துவிட்டு மறைந்து இருக்கிறார் ஜெயலலிதா. யாருடைய குடும்பத்துக்கும் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என்று எண்ணி, அவர்கள் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அவர்களையெல்லாம் வீட்டை விட்டு வெளியேற்றி, தனது காலம் வரையிலும் அதில் உறுதியாக நின்று, கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் பிடியில் சென்றுவிடாமல் காத்துவந்தவர் ஜெயலலிதா.

ஆனால் இன்றைய நிலைமையில், ஜெயலலிதாவின் கொள்கைக்கும் கோட்பாடுகளுக்கும் மாறாக, ஆட்சியும் கட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றிருக்கிறது. அந்தக் குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் கட்சியை மக்கள் இயக்கமாக, தொண்டர்களின் இயக்கமாக ஜெயலலிதா மாற்றினார்.

ஜெ.மரணத்தில் நீதி கிடைக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்! ஆர்.கே.நகரில் பன்னீர்செல்வம் சூளுரை1

ஜெயலலிதாவின் மரணம் பற்றிய சந்தேகங்கள், தமிழக மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் தீக்குளித்து படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு நான் சென்று பார்த்துவிட்டுத் திரும்பியபோது மிகப்பெரிய கூட்டம் இருந்தது. அப்போது, ஒரு தாய் என்னைப் பார்த்து ஓடிவந்தார்கள். ஐயா, அம்மாவின் மரணத்துக்கான காரணத்தை, நீங்கள் உறுதியாக சட்டத்தின் மூலமாக நிரூபிக்க வேண்டும். அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். நான் முதலமைச்சராக இருந்தபோது, அதற்கான பூர்வாங்கப் பணிகள் மேற்கொண்டபோதுதான் நிலை தலைகீழாக மாறியது.

யாருடைய கையில் கட்சியும் ஆட்சியும் இருக்கக்கூடாது என்று ஜெயலலிதா நினைத்து, இந்த இயக்கத்தை வலியுறுத்திச் சென்றார்களோ அதை நிறைவேற்றத்தான் இந்த தர்மயுத்தம். இந்த தர்ம யுத்தத்தில் வெற்றி பெறப்போவது நாம்தான். உடனடியாக மாநில அரசும், மத்திய அரசும் தலையிட்டு ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கிற அந்த சந்தேகங்களை, உரிய நீதிவிசாரணை வைத்து தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் தமிழக மக்களுடைய ஒட்டுமொத்த கோரிக்கை. அந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை தர்மயுத்தம் தொடரும். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். அ.தி.மு.க தொண்டர்கள் இருக்கும் வரும்வரை இந்த தர்மயுத்தம் தொடரும்" என்று பேசினார்.

- சகாயராஜ்

படங்கள்: வி.ஶ்ரீநிவாசுலு

அடுத்த கட்டுரைக்கு