Published:Updated:

மோடியிடம் பணிந்தது பா.ஜ. தலைமை!

மோடியிடம் பணிந்தது பா.ஜ. தலைமை!
மோடியிடம் பணிந்தது பா.ஜ. தலைமை!
மோடியிடம் பணிந்தது பா.ஜ. தலைமை!

புதுடெல்லி/மும்பை:குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அதிருப்திக்கு ஆளான சஞ்சய்  ஜோஷியை கட்சியை விட்டு விலக செய்து,கட்சியின் தேசிய செயற் குழு கூட்டத்தில்  கலந்துகொள்ள அவரின் சம்மதத்தை பெற்றுள்ளார் பா.ஜனதா தலைவர் நிதின் கட்கரி.

குஜராத் மாநில பா.ஜனதா தலைவர்களில் ஒருவராக இருந்த சஞ்சய் ஜோஷி,கடந்த  2005 ம் ஆண்டு பாலியல் சி.டி. சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து,அவர் மீது  மோடி  அதிருப்தியடைந்தார்.இதனையடுத்து அவரது வலியுறுத்தலின் பேரில் சஞ்சய்  கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் சஞ்சய் ஜோஷியை,அண்மையில் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டார்  பா.ஜனதா தலைவரான நிதின் கட்கரி.அத்துடன் பா.ஜனதா கட்சியின் உத்தரப்பிரதேச  மாநில பொறுப்பாளராகவும் ஜோஷி நியமிக்கப்பட்டார்.இதனால் கட்கரி மீது மோடி  அதிருப்தி அடைந்தார்.

இந்நிலையில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக மும்பையில் நடைபெற  உள்ள பா.ஜனதா கட்சியின் செயற் குழு கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று  மோடி தரப்பில் தெரிவிக்கபட்டது.

ஏற்கனவே கடந்த டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பா.ஜனதா மாநாட்டிலும் மோடி  கலந்துகொள்ளாமல் புறக்கணித்த நிலையில்,தற்போது செயற் குழு கூட்டத்திலும்  கலந்துகொள்ளவில்லை என்றால் அது கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளட்து போன்ற  எண்ணத்தை உருவாக்கி விடும் என்று பா.ஜனதா தலைமை கருதியது.

இதனையடுத்து சஞ்சய் ஜோஷியை கட்சியை விட்டு விலகுமாறு கேட்டுக் கொண்டார்  நிதின் கட்கரி.ஜோஷியும் அதனை ஏற்று பா.ஜனதாவிலிருந்து விலகினார்.

இதனைத் தொடர்ந்து மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய  நிதின்,சஞ்சய் ஜோஷி கட்சியிலிருந்து விலகிவிட்டதாகவும்,எனவே கட்சியின் செயற்  குழுவில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொண்டார்.மோடியும் அதனை ஏற்றுக்கொண்டதாக  தெரிகிறது.

இந்நிலையில்,பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர  மோடி பங்கேற்பார் ‌‌என நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.